
‘’ஹரியானாவில் பாஜக வேட்பாளரை கல்லால் அடித்து விரட்டிய மக்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ *தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த ஹரியானா பாஜக வேட்பாளர் கல்லால் அடித்து ஓட ஓட விரட்டிய பொது மக்கள்… 🤦♀️🤭😂
#NoVoteForBJP #NoVoteToBjp,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இந்த வீடியோ காட்சிகளை பார்க்கும்போது, உள்ளே Bharat News, PB News என்ற லோகோ உள்ளதையும், இடது பக்கம் மேலே SIRSA என்று எழுதப்பட்டுள்ளதையும் கண்டோம்.

இதன் அடிப்படையில் தகவல் தேடியபோது, இந்த வீடியோ கடந்த 2021ம் ஆண்டு Pahredar Bharat News என்ற யூ டியுப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்ததைக் கண்டோம். இதற்கு, ‘’ बड़ी खबर -भारी पड़ गया डिप्टी स्पीकर को सिरसा cdlu आना,किसानों ने तोड़ी रणबीर गंगवा की गाड़ी ,’’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
கூகுள் உதவியுடன் மொழிபெயர்ப்பு செய்தபோது, ‘’துணைச் சபாநாயகர் ரன்பிர் கங்வா, சிர்சா வந்ததற்காக, பெரிய விலையை கொடுத்தார்,’’ என்று அர்த்தம் கிடைத்தது.
மேலும் தகவல் தேடினோம். அப்போது சில செய்தி ஆதாரங்கள் கிடைத்தன. இதன்படி, கடந்த 2021ம் ஆண்டு ஹரியானா மாநிலம், சிர்சா என்ற இடத்தில் பாஜக.,வுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, அங்கு வந்த அம்மாநில துணைச் சபாநாயகர் ரன்பிர் சிங் கங்வா பிராஜாபதி, பாஜக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, கிளம்பியபோது, அவரது காரை முற்றுகையிட்டு, போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில், அவர் காயமின்றி தப்பினார். இந்த விவகாரம் தொடர்பாக, ஹரியானா போலீசார் வழக்குப் பதிந்து 5 பேரை கைது செய்தனர்.

India Today Link l Times of India Link l The Hindu Link
எனவே, 2021ம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் தொடர்பான தாக்குதல் காட்சி ஒன்றை எடுத்து, 2024 மக்களவைத் தேர்தலுடன் தொடர்புபடுத்தி, பாஜக வேட்பாளர் விரட்டியடிக்கப்பட்டதாக, வதந்தி பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:ஹரியானாவில் பாஜக வேட்பாளரை கல்லால் அடித்து விரட்டிய மக்கள் என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False
