FactCheck: மோடி ஆட்சியில் இறந்த சடலத்தை கடித்துக் குதறும் நாய்?- பழைய புகைப்படத்தால் குழப்பம்!

இந்தியா கோவிட் 19 சமூக ஊடகம்

‘’மோடி ஆட்சியில் இறந்த சடலத்தை கடித்துக் குதறும் நாய்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

‘’மாட்டிறைச்சி சாப்பிட்டால் கேள்வி கேட்கும் இந்த நாட்டில், மனிதனை நாய் தின்னும் அவலம், மோடியின் ஆட்சி கொடுமை,’’ என்று எழுதப்பட்டுள்ள இந்த ஸ்கிரின்ஷாட்டை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டுக் கொண்டனர். 

இதன்பேரில், நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, நிறைய பேர் இதனை உண்மை என்று நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link Archived Link 

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படத்தை நன்கு கவனித்தபோது, அதில், Alamy என்ற லோகோ இடம்பெற்றுள்ளதைக் கண்டோம். இது, ஆன்லைனில் புகைப்படங்களை விற்கும் ஒரு இணையதள சேவை நிறுவனமாகும்.

இதன்பேரில், அந்த இணையதளம் சென்று வெவ்வேறு கீவேர்ட் பயன்படுத்தி தகவல் தேடினோம். அப்போது, இந்த புகைப்படம் காணக் கிடைத்தது.

அதில், இந்த புகைப்படம், 2008-ம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் இருந்து எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Alamy.com Link

பிரதமர் மோடி, கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்லில், வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இதனால், 2008ம் ஆண்டு வாரணாசியில் எடுத்த புகைப்படத்தை, தவறுதலாக, தற்போதைய தொகுதி நிலை என்ற நினைப்பில், இவ்வாறு மறுபகிர்வு செய்து, வதந்தி பரப்புகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக, நமது மலையாளம் பிரிவில் வெளியிடப்பட்ட செய்தியின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

Fact Crescendo Malayalam Link

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:மோடி ஆட்சியில் இறந்த சடலத்தை கடித்துக் குதறும் நாய்?- பழைய புகைப்படத்தால் குழப்பம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: Missing Context