தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் என்று பரவும் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் | Social சமூகம் சர்வதேசம் | International

தஜிகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் போது பதிவான காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நிலநடுக்கத்தின் போது அறை ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கீழே விழும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தஜிகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Mohamaad Jinnah Mohamaad Faarisz என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 பிப்ரவரி 23ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

துருக்கி, சிரியாவைத் தொடர்ந்து தஜிகிஸ்தான் நாட்டிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் தஜிகிஸ்தான் நில நடுக்கத்தின் போது பதிவான காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரவே, அது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

வீடியோவை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2021ம் ஆண்டில் இருந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. ஜப்பான் மொழியில் சில பதிவுகள் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பதிவாகி இருப்பதை காண முடிந்தது. இந்த வீடியோக்கள் எல்லாம் 2021ம் ஆண்டில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.

https://twitter.com/himei42/status/1360595666775379971

Archive

சமூக ஊடக பதிவுகளைத் தவிர்த்துவிட்டு, செய்தி ஊடகங்களில் ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்போது 2021ம் ஆண்டு சில ஊடகங்களில் இந்த வீடியோ வெளியாகி இருந்தது தெரிந்தது. அந்த செய்தியை மொழிமாற்றம் செய்து பார்த்த போது, ஜப்பானில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: subrayado.com.uy I Archive

இதன் மூலம் 2021ம் ஆண்டு ஜப்பானில் பதிவான வீடியோவை, 2023ல் தஜிகிஸ்தானில் நடந்தது என்று தவறாகப் பகிர்ந்திருப்பதாக, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2021ம் ஆண்டு ஜப்பானில் பதிவான நிலநடுக்க பாதிப்பு வீடியோவை 2023 தஜிகிஸ்தான் நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்டது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False