'’ ஆருத்ரா நிதி மோசடியில் ரூ.100 கோடி வாங்கிய அண்ணாமலை,’’ என்று பாஜக தமிழ்நாடு துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

பலரும் இந்த பதிவை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். தினமலர் லோகோவுடன் பகிரப்பட்டு வரும் இதனை மீண்டும் ஒருமுறை கீழே இணைத்துள்ளோம்.

உண்மை அறிவோம்:

அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி மோசடி செய்த புகாரின்பேரில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்திற்கு, பாஜக நிர்வாகிகள் ஆதரவாக உள்ளனர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

Vikatan link l abplive link

இந்த சூழலில்தான் மேற்கண்ட வகையில் சிலர் செய்தி பகிர்ந்து வருகின்றனர். இதில், தினமலர் லோகோ இடம்பெற்றுள்ளதால், அவர்களது சமூக வலைதள பக்கங்களில் சென்று விவரம் தேடினோம். ஆனால், இப்படியான எந்த செய்தியும் காண கிடைக்கவில்லை.

அடுத்தப்படியாக, தினமலர் ஆசிரியர் குழுவை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘இவ்வாறான செய்தி எதுவும் வெளியிடவில்லை,’ என்றனர்.

இதைத்தொடர்ந்து, நாராயணன் திருப்பதியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் சென்று பார்த்தபோது, அவர் ‘இது போலியான செய்தி’ என்று குறிப்பிட்டு, பதிவு ஒன்றை வெளியிட்டிருப்பதைக் கண்டோம். அந்த லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, போலியான ஒரு செய்தியை தினமலர் லோகோவுடன் தயாரித்து, பாஜக.,வுக்கு எதிராகச் சிலர் பரப்பி வருவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:ஆருத்ரா நிதி மோசடியில் ரூ.100 கோடி வாங்கிய அண்ணாமலை என்று நாராயணன் திருப்பதி கூறினாரா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False