'’ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார்; சுட்டுத்தள்ளுங்கள்,’’ என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசியதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Claim Tweet Link l Archived Link

பலரும் இந்த பதிவை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த வீடியோவில், nba என்ற லோகோ இடம்பெற்றுள்ளதைக் கண்டோம். இதன்பேரில் விவரம் தேடியபோது, இதனை nba 24×7 என்ற ஊடகம் தனது யூடியுப் பக்கத்தில் பகிர்ந்திருப்பதைக் கண்டோம். முழு வீடியோவை பார்த்தபோது, அண்ணாமலை பேசுவது வேறொன்றாக உள்ளது.

https://www.youtube.com/watch?v=PNWoYKJrJUY Embed

இதன்படி, கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, ‘’எல்லையில் பணிபுரியும் தமிழக ராணுவ வீரர்களே, அரசு உங்களுடன் இல்லை என்றாலும், நாங்கள் உங்களுடன் இருப்போம் என்ற செய்தியை சொல்கிறோம். உங்களுடைய கையில் துப்பாக்கி இருக்கு, துப்பாக்கி உள்ளே குண்டு இருக்கு, ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார். நீங்கள் சுட்டு தள்ளிட்டு வந்துட்டே இருங்க, பாரதிய ஜனதா கட்சி தமிழகத்திலே பார்த்துக் கொள்ளும். எதை பற்றியும் பயப்படாமல் பார்டரில் இருக்கக்கூடிய ஒவ்வொரு தமிழ்நாட்டைச் சேர்ந்த படை வீரரும் சொல்லுங்கள். உங்களுடன் பணிபுரியும் மற்ற மாநிலத்தினர் வியக்க வேண்டும். ஓ, உங்கள் ஊரில் உங்களுக்கு இப்படி எல்லாம் ஆதரவு உள்ளதா என்று கேட்க வேண்டும்,’’ என்று பேசுகிறார்.

இதன்படி, ராணுவத்தினரை பார்த்து அண்ணாமலை பேசும் வீடியோவை எடுத்து, பொத்தாம் பொதுவாக, அவர் தனது கட்சியினரை தூண்டுகிறார் என்றும், பொதுமக்களிடையே வன்முறை ஏற்படுத்தும் வகையில் பேசுகிறார் என்றும் குறிப்பிட்டு வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகறது.

எடிட் செய்யப்பட்ட வீடியோவையும், முழு வீடியோவையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:சுட்டுத் தள்ளுங்கள் என்று பேசிய அண்ணாமலை; முழு உண்மை என்ன?

Fact Check By: Fact Crescendo Team

Result: MISLEADING