பாஜக.,வின் மத அரசியல்தான் சரி என்று அண்ணாமலை கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’பாஜக மத அரசியல்தான் சரியான பாதை,’’ என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

மேற்கண்ட நியூஸ்கார்டை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார்.

இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கிலும் பகிர்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
கிறிஸ்தவ பள்ளியில் படித்த மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சமீபத்தில் தமிழ்நாடு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்து, பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகிறது. இதுபற்றி நாம் சில உண்மை கண்டறியும் ஆய்வுகளையும் நடத்தி, முடிவுகளை வெளியிட்டிருக்கிறோம்.

Fact Crescendo Tamil Link 1 I Fact Crescendo Tamil Link 2 I Fact Crescendo Tamil Link 3

மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என ஜூனியர் விகடன் தரப்பில் கேட்டபோது, இது போலி என்று தெரிவித்தனர். எனவே, இது போலியான நியூஸ் கார்டு என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:பாஜக.,வின் மத அரசியல்தான் சரி என்று அண்ணாமலை கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False