
‘’விஜய்க்கு கண்டனம் தெரிவித்த கயாடு லோஹர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ My deepest condolences to the families of those who lost their lives. Lost one of my closest friends in the Karur rally. All for TVK’s selfish politics. Vijay, people are not props for your stardom. How many more lives for your hunger? #Karur #Stampede #TVKVijay,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3

Kayadu Lohar பெயரில் மேற்கண்ட X பதிவு உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதுபோன்று எந்த கருத்தும் Kayadu Lohar கூறவில்லை, என்று தெரியவந்தது. மேலும், இந்த வதந்தியை மறுத்து, உடனடியாக Kayadu Lohar அவரது அதிகாரப்பூர்வ X வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக, பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.

Times of India l Hindustan Times l Live Mint
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவு, Kayadu Lohar பெயரில் பரவும் வதந்தி, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
