
பிராமணர்களின் ஓட்டுகளே எச்.ராஜா வெற்றியடைய போதுமானது என்று தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் படத்துடன் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பிராமணர்களின் ஓட்டுக்களே எச்.ராஜா அவர்கள் வெற்றியடைய போதுமானது. சூத்திர ஓட்டுக்கள் தேவையற்றது. கே.டி.ராகவன் பரபரப்பு பேட்டி” என்று இருந்தது.
இந்த நியூஸ் கார்டை Victor Jero என்பவர் 2021 மார்ச் 24 அன்று பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை தங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஒரு குறிப்பிட்ட சாதியினரின் வாக்குகள் வேண்டாம் என்று அரசியல் கட்சிகள் கூறியதாக தொடர்ந்து மாற்றி மாற்றி போலியான நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, வன்னியர் ஓட்டு வேண்டாம் என்று தி.மு.க கூறியதாக சமூக ஊடகங்களில் போலியான நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டன.

தற்போது, பிராமணர்கள் மட்டும் வாக்களித்தால் போதும் என்று கே.டி.ராகவன் கூறியதாக வைரலாக இந்த நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. ஃபேஸ்புக் மட்டுமின்றி ட்விட்டர் உள்ளிட்ட மற்ற சமூக ஊடகங்களிலும் இந்த நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது.
இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் பயன்படுத்துவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் பழைய நியூஸ் கார்டை வைத்து வதந்திகள் பரப்பி வருகின்றனர். நியூஸ் 7 தமிழ் வெளியிடும் ஃபாண்ட் இல்லை. தேதி இல்லை. எனவே, முதலில் இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டதா என்று தெரிந்துகொள்ள அதன் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதாவை தொடர்புகொண்டு கேட்டோம். “இது நாங்கள் வெளியிட்டது இல்லை. போலியாக உருவாக்கப்பட்டுள்ளது” என்று அவர் உறுதி செய்தார்.
கே.டி.ராகவன் தரப்பையும் தொடர்புகொண்டு இது பற்றிக் கேட்டோம். இப்படி யாராவது சொல்வார்களா என்று பதில் கேள்வி எழுப்பிய அவர்கள், இது போலி, என்று உறுதி செய்தனர்.
தேர்தலில் சாதனைகள், செய்யப் போகும் வாக்குறுதிகளை சொல்லி வாக்கு கேட்பதை விடுத்துச் சாதி, மத உணர்வைத் தூண்டி வாக்கு கேட்பது என்ன மாதிரியான மன நிலையோ தெரியவில்லை. நம்முடைய ஆய்வில் இந்த நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பிராமணர் அளிக்கும் வாக்குகளே எச்.ராஜா வெற்றி பெற போதுமானது, மற்றவர்கள் வாக்கு தேவையில்லை என்று கே.டி.ராகவன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பிராமணர் வாக்குகளே எச்.ராஜா வெற்றி பெற போதும் என்று கே.டி.ராகவன் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False

I myself denied what was said in the post and that it did not require a fact finding. I did not commit any mistake in sharing the post than denying such words from KDR.