FactCheck: அனுமதியின்றி கட்டிய இந்து கோயில்களை இடிப்போம் என்று திமுக வாக்குறுதி அளித்ததா?

அரசியல் சமூக ஊடகம்

‘’அனுமதியின்றி கட்டிய இந்து கோயில்களை இடிப்போம் என்று திமுக வாக்குறுதி,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, அனுமதியின்றி கட்டப்பட்ட இந்து கோயில்களை இடித்துவிட்டு, கலைஞர் படிப்பறிவு மையம் அமைக்கப்படும் என்று திமுக 2021 சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குறுதி அளித்துள்ளதா என்று, நமக்கு நெருங்கிய ஊடக நண்பர்களிடம் விசாரித்தோம்.

அப்படி எதுவும் வெளியிடவில்லை, அப்படி கூறியிருந்தால் அது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இதையடுத்து, நாம் திமுக தேர்தல் அறிக்கை 2021 முழு விவரம் பெற்று, படித்து பார்த்தோம். எந்த இடத்திலும் இப்படி குறிப்பிடப்படவில்லை.

DMK Manifesto 2021 Link

இதற்கடுத்தப்படியாக, திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் உதவியாளரிடம் பேசினோம். அவரும், ‘’இத்தகைய அறிவிப்பு எதுவும் திமுக வெளியிடவில்லை,’’ என்று உறுதிப்படுத்தினார்.

எனவே, திமுக பெயரில் பகிரப்படும் வதந்தியே மேலே நாம் கண்ட ஃபேஸ்புக் பதிவு என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:அனுமதியின்றி கட்டிய இந்து கோயில்களை இடிப்போம் என்று திமுக வாக்குறுதி அளித்ததா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply