உத்தரப் பிரதேசத்தில் பெண்களை கிண்டல் செய்தவனுக்கு யோகி தண்டனை என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

‘’உத்தரப் பிரதேசத்தில் பெண்களை கிண்டல் செய்தவனுக்கு யோகி ஆதித்யநாத் அரசு வழங்கிய தண்டனை,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ உத்திரப்பிரதேசத்தில் பெண்களை கிண்டல் செய்தவனுக்கு யோகி மெடிடேசன் 🤣🤣🤣

இங்கு தமிழ்நாட்டில் பாலியல் வன்மை கொடுமை செய்தவனை சபாநாயகர் (சாபநாயகர்) தம்பி என்று அழைப்பார்..,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2  

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த 2015ம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் எடுக்கப்பட்ட வீடியோ என்று, தெரியவந்தது. 

இதன்படி, கடந்த 2015ம் ஆண்டு இந்தூரில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை ஊர்வலமாக அழைத்துச் சென்று, இவ்வாறு மத்தியப் பிரதேச மாநில போலீசார் அடித்துள்ளனர். குற்றவாளிகள் மட்டுமின்றி, பொதுமக்களிடையே பயம் ஏற்படுத்தும் நோக்கில் இந்த தண்டனை ஊர்வலம் நடத்தப்பட்டதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு வீடியோ லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

மேலும், சில செய்தி ஆதாரங்களும் இங்கே இணைக்கப்பட்டுள்ளன. 

India TV l Aaj Tak 

எனவே, 2015ம் ஆண்டு மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோவை எடுத்து, உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் பாஜக ஆட்சியை பாராட்டி, அதேசமயம் தற்போது தமிழ்நாட்டில் நடைபெறும் திமுக அரசை விமர்சிக்கும் நோக்கில், வதந்தி பரப்புகிறார்கள் என்று நமக்கு தெளிவாகிறது. 

இவற்றின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பற்றிய தகவல் தவறானது என்று, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:உத்தரப் பிரதேசத்தில் பெண்களை கிண்டல் செய்தவனுக்கு யோகி தண்டனை என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Pankaj Iyer  

Result: Missing Context