
ராகுல் காந்திக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை யாரென்றே தெரியாது என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஊடகம் ஒன்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் புகைப்படத்துடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “செல்வ பெருந்தகை யாரென்றே தெரியாது. செல்வ பெருந்தகைய யார் என்றே ராகுல் காந்திக்கு தெரியாது. அவர் ஏன் சந்திக்க போகிறார். செல்வ பெருந்தகையை ராகுல் காந்தி சந்தித்தாரா என்ற செய்தியாளர் கேள்விக்கு மாணிக்கம் தாகூர் பதில்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருக்கும் செல்வப் பெருந்தகையை யார் என்றே ராகுல் காந்திக்கு தெரியாது என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவர்களில் பலரும் உஷாராக ஊடகத்தின் லோகோ பகுதியை அகற்றிவிட்டு பதிவிட்டு வருகின்றனர்.
நியூஸ் கார்டு உண்மையானது போல இல்லை. செல்வப் பெருந்தகையை என்பதை எழுத்துப் பிழையுடன் எழுதியுள்ளனர். ஒரு முறை அல்ல இரண்டு முறை ஒரே தவறு அந்த நியூஸ் கார்டில் செய்யப்பட்டுள்ளது. எனவே, இது போலியானதாக இருக்கலாம் என்பது தெரிந்தது. இதை உறுதி செய்துகொள்ள அந்த குறிப்பிட்ட ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். அதில், இந்த நியூஸ் கார்டை நாங்கள் வெளியிடவில்லை, இது போலியானது என்று அந்த ஊடகம் பதிவு வெளியிட்டிருந்தது. இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது தெளிவானது.
அடுத்து மாணிக்கம் தாகூர் இப்படி ஏதும் பேட்டி அளித்தாரா என்று அறிய தேடினோம். நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. மாணிக்கம் தாகூரின் சமூக ஊடக பக்கத்தை பார்வையிட்டோம். அவரும் இது “பொய் செய்தி” என்று குறிப்பிட்டுப் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ராகுல் காந்திக்கு செல்வப்பெருந்தகையை யார் என்றே தெரியாது என்று மாணிக்கம் தாகூர் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:‘ராகுலுக்கு செல்வப்பெருந்தகை யாரென்றே தெரியாது’ என்று மாணிக்கம் தாகூர் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False


