
‘’கோவையில் கல்லூரி மாணவர்கள் பிபின் ராவத் மரணத்தை கொண்டாடினார்கள்,’’ என்று கூறி ஒரு வீடியோ செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இந்த செய்தியை வாட்ஸ்ஆப் (+91 9049053770) வழியே வாசகர் ஒருவர் நமக்கு அனுப்பி உண்மையா எனச் சந்தேகம் கேட்டிருந்தார். இதுபற்றி தகவல் தேடியபோது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் பலர் இதனை உண்மை போல பகிர்வதை கண்டோம்.
Twitter Claim Link I Archived Link
Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சமீபத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அதையொட்டி, நிறைய வதந்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. நாமும் அவை பற்றி ஆய்வு செய்து, அவ்வப்போது உண்மையை வெளியிட்டு வருகிறோம்.
இந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்திதான் மேலே நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ செய்தியும்.
ஆம். இந்த மாணவர்கள் விருந்து கொண்டாடிய வீடியோ பழையதாகும். அதாவது, பிபின் ராவத் மரணத்திற்கு முன்பாக எடுக்கப்பட்டது. இந்த உண்மை புரியாமல், கேரளாவைச் சேர்ந்த கர்மா நியூஸ் என்ற ஊடகம், பிபின் ராவத் இறந்த பின், இப்படியான கேளிக்கை விருந்தை குன்னூர், குனியமுத்தூர் பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரிகளின் விடுதிகளில் இஸ்லாமிய மாணவர்கள் விருந்து வைத்து கொண்டாடியதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதனை எடுத்து, மற்றவர்களும் உண்மை போல பகிர்ந்து வருகின்றனர்.
கர்மா நியூஸ் வெளியிட்ட வீடியோவை கீழே பகிர்ந்துள்ளோம்.
இந்த வீடியோ தொடர்ந்து வைரலாக பகிரப்படும் சூழலில், குனியமுத்தூரில் செயல்படும் நேரு கல்வி குழுமம் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளது. ‘’எங்களது கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வகையில் இந்த விருந்து நடத்தப்பட்டது. இது பிபின் ராவத் மரணத்திற்கு முன்பே நடத்தப்பட்டுவிட்டது. அதனை வேண்டுமென்றே சிலர் வதந்தி சேர்த்து தற்போது பகிர்கிறார்கள். இது மிகவும் வருத்தமளிக்கிறது,’’ எனக் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, டிசம்பர் 7, 2021 அன்று இந்த விருந்து நடத்தப்பட்டிருக்கிறது. பிபின் ராவத் மரணத்திற்கு காரணமான ஹெலிகாப்டர் விபத்து டிசம்பர் 8, 2021 அன்று நிகழ்ந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
நேரு கல்வி குழுமம் (Nehru Group of Institutions) வெளியிட்ட செய்திக்குறிப்பு கீழே தரப்பட்டுள்ளது.
இதுபற்றி ஊடகங்களிலும் செய்தி வெளியாகியிருக்கிறது. போலீசாரும் விசாரிக்கின்றனர்.
எனவே உண்மைத்தன்மை சரிபார்க்காமல் கேரள ஊடகம் (Karma News) வெளியிட்ட செய்தியை பலரும் உண்மை போல அப்படியே பகிர்ந்து வருவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:கோவையில் கல்லூரி மாணவர்கள் பிபின் ராவத் மரணத்தை கொண்டாடினார்களா?
Fact Check By: Pankaj IyerResult: False
