
ஸ்மிருதி இரானி மகள் நடத்தும் ஓட்டலில் மாட்டிறைச்சி விற்பனை என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
ஸ்மிருதி இரானி மகள் ஜோயிஷ் இரானி சட்டவிரோதமான முறையில் கோவாவில் ரெஸ்டாரண்ட் மற்றும் பார் ஒன்றை சட்டவிரோதமான முறையில் நடத்துவதாக, காங்கிரஸ் கட்சி தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது.
இதனை ஏற்கனவே ஸ்மிருதி இரானி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்கு தொடரப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
அதேசமயம், இந்த ஓட்டல் பற்றி சமீபத்தில் Kunal Vijayakar என்பவர் யூடியுபில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோவில் அவர் ஸ்மிருதி இரானி மகள் ஜோயிஷ் இரானியுடன் கலந்துரையாடுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அப்போது, அவரை குறிப்பிட்ட ஓட்டலின் உரிமையாளர் என்றே குறிப்பிட்டு, குணால் விஜயகர் அறிமுகம் செய்கிறார்.
எனினும், இது நீதிமன்ற சிக்கல் விவகாரம் என்பதால், நாம் உரிமையாளர் யார் என்பதில் மூக்கை நுழைக்காமல், மெனு பற்றி மட்டுமே ஆய்வு மேற்கொண்டோம்.
இதுதொடர்பாக நாம், Silly Souls Goa Café & Bar அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று தகவல் தேடினோம். அங்கே மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக, எந்த தகவலும் காணக் கிடைக்கவில்லை.
நமக்கு கிடைத்த Swiggy, Zomato ஆய்வுகளின் படி, குறிப்பிட்ட ஓட்டலின் மெனு பட்டியலில் மாட்டிறைச்சி இடம்பெறவில்லை. மாட்டிறைச்சி அங்கே கிடைக்கிறது எனில், கண்டிப்பாக, மெனுவில் குறிப்பிட்டிருப்பார்கள். இதுபற்றி அவர்களது இணையதளத்திலும் தெளிவாக, தகவல் தேடிப் பார்த்து விட்டோம். மாட்டிறைச்சி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
ஒருவேளை இந்த விவகாரத்தில் கூடுதல் விவரம் கிடைக்கும்பட்சத்தில் நாம் நமது ஃபேக்ட்செக் கட்டுரையில் அவற்றை சேர்க்க தயாராக உள்ளோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:ஸ்மிருதி இரானி மகள் நடத்தும் ஓட்டலில் மாட்டிறைச்சி விற்பனை என்று பகிரப்படும் வதந்தி…
Fact Check By: Fact Crescendo TeamResult: Partly False
