ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை 40 ஆக மாற்றுவேன் என்று மோடி கூறினாரா?

இந்தியா சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை 40 ஆக குறைப்பேன் என்று மோடி காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கூறினார்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்கள் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் எண் வழியே அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.

இதேபோல, கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பலரும் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.

FB Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
கடந்த 2014ல் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வரும் முன்பாக, காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற சமயத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சர்வதேச சந்தையில் பலவீனமாகக் காணப்பட்டபோது, அதுதொடர்பாக மோடி உட்பட பல்வேறு பாஜக தலைவர்களும் காரசாரமாக விமர்சித்தது உண்மைதான்.

India Today LinkThe Hindu Article Link

ஆனால், இவர்கள் குறிப்பிடுவது போல, மத்தியில் ஆட்சிக்கு வந்தால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை 40 ஆக குறைப்பேன் என்று மோடி எங்கேயும் கூறவில்லை. நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவுகளில் பகிர்ந்துள்ள வீடியோக்களில் கூட, அவர் அப்படி எதுவும் கூறவில்லை. பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள் பிரச்னை, ரூபாய் மதிப்பு பிரச்னை போன்றவற்றை திறம்பட காங்கிரஸ் அரசு கையாளவில்லை என்றே அவர் குறிப்பிடுகிறார்.

அதேசமயம், மோடி ஆட்சிக்கு வந்தால், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 ஆகக் குறையும் என்று கடந்த 2014 காலக்கட்டத்தில், பல்வேறு பொருளாதார ஆய்வறிக்கைகள் வெளியாகின. ஆனால், மோடி நேரடியாக இப்படி எங்கும் கூறவில்லை.

TOI Link

இதேபோல, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூட ஒரு ட்வீட்டை வெளியிட்டிருந்தார்.

எனவே, மோடி ஆதரவாளர்கள், சில பொருளாதார நிபுணர்கள், ஆய்வறிக்கைகளில் கூறப்பட்ட தகவலை எடுத்து, மோடியே நேரடியாகக் குறிப்பிட்டது போல கூறி, சமூக வலைதளங்களில் சிலர் தகவல் பகிர்வதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை 40 ஆக மாற்றுவேன் என்று மோடி கூறினாரா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False

Leave a Reply