
‘’ஜக்கி வாசுதேவ் ரகசியமாக மு.க.ஸ்டாலினை சந்தித்தார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இந்த செய்தியை வாசகர் ஒருவர் நமக்கு, வாட்ஸ்ஆப் வழியாக அனுப்பியிருந்தார். இதனை மேற்கொண்டு, ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்வு செய்துள்ளனரா என தேடியபோது, பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.
உண்மை அறிவோம்:
தற்போதைய அரசியல் சூழலில், தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, சாதுக்கள் கட்டுப்பாட்டில் விட வேண்டும் என்று, ஜக்கி வாசுதேவ் கோரிக்கை விடுத்து வருகிறார். அதேசமயம், அவரது பேச்சுக்கு பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளதோடு, அவரது சாமியார் மடத்தை தமிழ்நாடு அரசு கைப்பற்ற வேண்டும் என்றும் கருத்து கூறுகின்றனர்.
இதுபற்றி ஊடகங்களில் வெளியான செய்தியை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
இந்த சூழலில், திமுக.,விற்கும், ஜக்கி வாசுதேவிற்கும் இடையே ரகசிய அரசியல் உறவு உள்ளதாகக் கூறி, மேற்கண்ட ஃபேஸ்புக் புகைப்பட பதிவு, பகிரப்பட்டு வருகிறது.
உண்மையில், இந்த புகைப்படத்திற்கும், தற்போதைய அரசியல் சூழலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இது கடந்த 2018ம் ஆண்டு கருணாநிதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அப்போது, அவரை பார்க்க ஏராளமான அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் நேரில் சென்றனர். அதன்படி, ஜக்கி வாசுதேவும் நேரில் சென்று, பார்வையிட்டார். அப்போது எடுத்த புகைப்படம்தான், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளதும்…

இதுதொடர்பாக, மற்றும் ஒரு வீடியோ பதிவை கீழே இணைத்துள்ளோம்.
எனவே, 2018ம் ஆண்டு உடல்நலம் விசாரிக்கும்போது, எடுத்த புகைப்படத்தை தற்போதைய அரசியல் நிகழ்வுடன் தொடர்புபடுத்தி, பகிர்ந்துள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:அரசியல் தேவைக்காக மு.க.ஸ்டாலினை ஜக்கி வாசுதேவ் சந்தித்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: Partly False
