
‘‘விஜய் ஒரு தற்குறி,’’ என்று நாஞ்சில் சம்பத் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ விஜய் ஒரு தற்குறி – தவக்களை, பொறம்போக்கு – நாஞ்சில் சம்பத்’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதன் முழு வீடியோ லிங்க் கிடைத்தது.

நக்கீரன் லோகோவுடன் உள்ள இந்த வீடியோவில், சீமான் பற்றி விமர்சித்து, நாஞ்சில் சம்பத் பேசுகிறார். இதனை எடுத்தே, விஜய் பற்றி அவர் பேசியதாகக் குறிப்பிட்டு, தவறான தகவல் பரப்புகிறார்கள்.

முழு வீடியோ லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
இதன்படி, பழைய வீடியோவை எடுத்து, தவெக.,வில் நாஞ்சில் சம்பத் இணைந்துள்ள தற்போதைய சூழலுடன் தொடர்புபடுத்தி, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகிறார்கள்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:விஜய் ஒரு தற்குறி என்று நாஞ்சில் சம்பத் கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: Misleading


