தவெக தேர்தல் பிரசாரம் 28.01.2026 முதல் தொடங்கியதா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu தவறாக வழிநடத்துபவை I Misleading

‘‘தவெக தேர்தல் பிரசாரம் 28.01.2026 முதல் தொடங்குகிறது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ நாளை முதல் தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பிரச்சார கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற உள்ளது’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 l Archived Link        

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது தவறான தகவல், என்று தெரியவந்தது. 

இதன்படி, தவெக தலைமைக் கழகம் தரப்பில் கேட்டபோது, ‘’இதுபோன்ற எந்த அறிவிப்பையும் தவெக தலைவர் விஜய் வெளியிடவில்லை. மேலும், 28.01.2026 அன்று YMCA மைதானத்தில் தவெக சென்னை செயல்வீரர்களுக்கான தேர்தல் பிரசார ஆலோசனைக் கூட்டம் மட்டுமே நடைபெற்றது. தேர்தல் பிரசாரம் எதுவும் தொடங்கப்படவில்லை. தவறான தகவல் பரப்புகிறார்கள்,’’ என்று தெரிவித்தனர். 

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

Polimer News l Dailythanthi 

மேலும் குறிப்பிட்ட நிகழ்ச்சி பற்றிய நேரலை லிங்க் இதோ…

எனவே, தேர்தல் பிரசார ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது என்ற செய்தியை எடுத்து, தேர்தல் பிரசாரம் தொடங்கப்பட்டதாகக் கூறி வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:தவெக தேர்தல் பிரசாரம் 28.01.2026 முதல் தொடங்கியதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Misleading

Leave a Reply