
‘’ரேஷன் கடையில் குவார்ட்டர் கேட்ட கிஷோர் கே சுவாமி தாக்கப்பட்டார்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Claim Link | Archived Link |
உண்மை அறிவோம்:
இந்த பதிவின் கமெண்ட் பகுதியில் இது உண்மையா என ஃபேஸ்புக் பயனாளர் ஒருவர் கேட்க, பதிவை வெளியிட்ட நபர், ‘’அடி வாங்குனது உண்மைன்னு கேள்விப்பட்டேன்.. ஆனால், விருகம்பாக்கத்துல இல்ல.. அசோக் நகர் பக்கம்.. பிளாக் சரக்கு மேட்டர்ல,’’ என பதில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, யாரோ ஒருவர் சொன்ன தகவலின் பேரில், உண்மை தெரியாமலேயே தனிநபர் வன்மத்தை தீர்த்துக் கொள்ளும் வகையில் இந்த பதிவு பகிரப்பட்டுள்ளதாக, தெளிவாகிறது.
இந்த பதிவுக்கு பதில் அளித்து கிஷோர் கே சுவாமி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘’திமுக ஆதரவாளர்கள் இத்தகைய போலியான பதிவை தயாரித்து பரப்பி வருகின்றனர்,’’ என்று அவர் கூறியுள்ளார்.
இது மட்டுமல்ல, இப்படியான வதந்தி பரப்புவதால் தனக்குத்தான் நல்ல நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைக்கிறது என்றும் கிஷோர் குறிப்பிட்டுள்ளார்.
Facebook Claim Link | Archived Link |
எனவே, இது தனிநபர் விரோத மனப்பான்மையில் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு என தெளிவாகிறது. சம்பந்தப்பட்ட நபரே இது தவறான தகவல் என்று மறுப்பு தெரிவித்து பதிவு ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ரேசன் கடையில் குவார்ட்டர் கேட்ட கிஷோர் கே சுவாமி தாக்கப்பட்டாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
