உதய தாரகை தமிழ் நாளிதழ் 1817-ல் தொடங்கப்பட்டதா?

இலங்கை உலகச் செய்திகள் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’உலகில் முதல் தமிழ் நாளிதழ் உதய தாரகை 14.01.1817 அன்று தொடங்கப்பட்டது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.

இதன்பேரில் தகவல் தேடியபோது, இந்த பதிவு கடந்த சில ஆண்டுகளாக, சமூக வலைதளங்களில் பகிரப்படுவதைக் கண்டோம்.

Twitter Post Link I Archived Link

உண்மை அறிவோம்:
நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஸ்கிரின்ஷாட்டில் Morning Star – உதய தாரகை என்ற நாளிதழின் புகைப்படத்தை இணைத்து, இதுதான் உலகிலேயே முதலில் வெளியான தமிழ் நாளிதழ் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், இதே பதிவின் மற்ற சில புகைப்படங்களை கண்டபோது, அதில், தேதி எதுவும் இல்லாததைக் கண்டோம்.

எனவே, ஒரு சிலர் தேதி குறிப்பிடாமல் பகிர, சிலர் அதில் 14.01.1817 என்று தேதியை குறிப்பிட்டு பகிர்வதையும் காண முடிகிறது.

இதன்பேரில், நமது இலங்கை பிரிவினரின் உதவியுடன், கூடுதல் ஆதாரத்திற்காக, இலங்கையில் உள்ள North Sri Lanka Journalists Association என்ற பத்திரிகையாளர் சங்கத்தை தொடர்புகொண்டு, விளக்கம் கேட்டோம்.

அவர்கள் இதுபற்றிய ஊடக செய்திக்குறிப்பு ஒன்றை வழங்கினர். அதில், உதய தாரகை – Morning Star கடந்த 1841ம் ஆண்டில் வெளியான ஒன்று எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Archived Link

எனவே, 1841ல் வெளியான உதய தாரகை நாளிதழ் பற்றிய புகைப்படத்தை எடுத்து, 1817ல் வெளியானதைப் போல குறிப்பிட்டு தகவல் பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:உதய தாரகை தமிழ் நாளிதழ் 1817-ல் தொடங்கப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Missing Context

Leave a Reply