உத்தரப் பிரதேசத்தில் லஞ்சம் தராத நோயாளியை கீழே தள்ளிவிட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் என்ற தகவல் உண்மையா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’உத்தரப் பிரதேசத்தில் லஞ்சம் தராத நோயாளியை கீழே தள்ளிவிட்ட 108 ஆம்புலன்ஸ் டிரைவர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ பாஜக ஆட்சி செய்யும் உத்திர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபரை அரசு ஆம்புலன்ஸ் வெளியே தொங்க விட்டு சென்றது. சிறிது தூரம் சென்றதும் நோயாளி நடுரோட்டில் படுக்கை ஸ்ட்ரெச்சருடன் விழுந்துவிட்டார். அதையும் கண்டு கொள்ளாமல் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்தில் இருந்து பறந்தது. கீழே விழுந்த நோயாளி கூறுகையில். அரசு ஆம்புலன்ஸ்க்கு 500 ரூபாய் தான் தர வேண்டும் என்றும் ஆனால் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் 1000 ரூபாய் கேட்டதாகவும், இதனால் நோயாளியின் உறவினருக்கும் ஆம்புலன்ஸ் டிரைவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறினார்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   

Claim Link 1 l Claim Link 2 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். முதலில், நாம் இதுதொடர்பாக ஊடகங்களில் ஏற்கனவே வெளிவந்த செய்திகளை பார்வையிட்டோம். 

இதன்படி, உத்தரப் பிரதேச மாநிலம் Gonda மாவட்டத்தில் உள்ள Balpur Jat என்ற கிராமத்தைச் சேர்ந்த Hriday Lal என்பவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மீது நீதி கேட்டு, அவரது உறவினர்கள், இறந்த நபரின் சடலத்தை ஆம்புலன்ஸில் இருந்து, தள்ளிவிட்டு, Lucknow – Gonda இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் செய்ய முயற்சித்தனர். உடனடியாக, Gonda Dehat Kotwali காவல் நிலைய போலீசார் அந்த இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த வீடியோவை எடுத்து, ஆம்புலன்ஸ் டிரைவர் லஞ்சம் கேட்டு, நோயாளியை கீழே தள்ளிவிட்டதாகக் கூறி, வேண்டுமென்றே சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகிறார்கள். 

இதுதொடர்பாக, நாம் சம்பந்தப்பட்ட போலீசாரிடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். கூடுதல் செய்தி ஆதாம் இதோ…

Zee News l CNN – News 18 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பற்றிய தகவல், தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:உத்தரப் பிரதேசத்தில் லஞ்சம் தராத நோயாளியை கீழே தள்ளிவிட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் என்ற தகவல் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer  

Result: False

Leave a Reply