FactCheck: பாகிஸ்தானில் வாழும் 210 வயது பெண்மணி; ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’பாகிஸ்தானில் வாழும் 210 வயது பெண்மணி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

‘’ பாகிஸ்தானில் உள்ள அதிக வயதான தாய், சில நாட்களூக்கு முன் தனது 210 வயது பிறந்தநாளை கொண்டாடினார்,’’ என்று குறிப்பிட்டு, இந்த புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் புகைப்படம் தொடர்பான வீடியோ ஒன்றையும் சிலர் ஷேர் செய்கின்றனர். அதில், இந்த பெண்மணிக்கு 300 வயது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இன்னும் சிலர் 256 வயது என்றும், 300 வயது என்றும் மாறி மாறி வேறு சில புகைப்படங்களையும் சேர்த்து, தகவல் பகிர்ந்திருந்தனர். அதன் அடிப்படையில் பார்த்தால், இந்த தகவலில் நம்பகத்தன்மை இல்லை.

Orissa Post Link I Popdiaries Link

இதுபற்றி கின்னஸ் சாதனை புத்தகத்தில் எதுவும் குறிப்பிடப்பட்டுள்ளதா என தகவல் தேடினோம். அப்போது, உலகிலேயே அதிக வயதான பெண் ஜப்பானில் வசிக்கிறார் என்றும், அவருக்கு வயது 117 என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இதுதொடர்பான முழு கட்டுரை லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

GuinnessWorldRecords Link

பாகிஸ்தானில், 210 வயது பெண் வசிக்கிறார் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் அங்கீகரிக்கப்பட்ட உலகின் வயதான பெண்மணி ஜப்பானில் வகிக்கிறார். எனவே, குறிப்பிட்ட ஃபேஸ்புக் தகவல் மீது நம்பகத்தன்மை இல்லை என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:பாகிஸ்தானில் வாழும் 210 வயது பெண்மணி; ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Misleading