FactCheck: மோடியின் வருகையை எதிர்த்து அமெரிக்க மக்கள் போராட்டம் நடத்தினரா?
‘’மோடியின் வருகையை எதிர்த்து அமெரிக்க மக்கள் போராட்டம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Claim Link I Archived Link
இதனை பலரும் தற்போது நிகழ்ந்தது போல குறிப்பிட்டு, ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதைக் கண்டோம்.
உண்மை அறிவோம்:
இந்திய பிரதமர் மோடி, அமெரிக்காவிற்கு சமீபத்தில் சுற்றுப் பயணமாகச் சென்றிருந்தார். இதன்போது நடைபெற்ற போராட்டம், சம்பவம் என்று கூறி சமூக வலைதளங்களில் நாள்தோறும் புதுப்புது தகவல்கள் பகிரப்படுகின்றன. அந்த வரிசையில் ஒன்றுதான் நாம் மேலே கண்ட வீடியோ பற்றிய தகவலும்.
உண்மையில் இந்த வீடியோ 2019 முதலாக, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒன்றாகும். 2019ல் இதே வீடியோவை வைத்து பகிரப்பட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றை கீழே இணைத்துள்ளோம்.
கடந்த 2019ம் ஆண்டும் இதேபோல, மோடி அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது காஷ்மீர் விவகாரத்தில் அவர் எடுத்த முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கவாழ் இந்தியர்கள் மற்றும் இதர அமைப்புகள் இணைந்து, அமெரிக்காவின் பல்வேறு இடங்களிலும் போராட்டம், கண்டன ஊர்வலம் நடத்தினர். அப்போது எடுக்கப்பட்டதுதான் நாம் ஆய்வு செய்யும் வீடியோ.
இது, நியூயார்க் நகரில் உள்ள East 47 Street பகுதியில், கடந்த செப்டம்பர் 27, 2019 அன்று நடைபெற்ற போராட்டத்தின்போது எடுக்கப்பட்டதாகும்.
இதுபற்றிய செய்தி லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
எனவே, பழைய நிகழ்வு தொடர்பான வீடியோவை எடுத்து, புதியதுபோல பகிர்ந்து, வாசகர்களை குழப்பி வருகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel
Title:மோடியின் வருகையை எதிர்த்து அமெரிக்க மக்கள் போராட்டம் நடத்தினரா?
Fact Check By: Pankaj IyerResult: Partly False