300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதியடைந்த சித்தர் உயிருடன் கண்டுபிடிப்பா?

இந்தியா சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதியடைந்த சித்தரின் உடல் உயிருடன் கண்டுபிடிப்பு,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:

இந்த செய்தி உண்மையா என விவரம் அறிய நாம் வள்ளலார் மடத்தை தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய மடத்தின் நிர்வாகி ஒருவர், ‘’இப்படி எந்த சம்பவமும் எங்களது வட்டாரத்தில் நிகழவில்லை,’’ என்று குறிப்பிட்டனர்.

தொடர்ந்து நாம் தேடியபோது, குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவின் கமெண்ட் பகுதியிலேயே இந்த நிகழ்வு பற்றி சிலர் விசாரித்து, உண்மையை பகிர்ந்திருந்தனர். இதுபோன்ற வதந்தியை பரப்ப வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

மேலும், மற்றொரு கமெண்ட்டில், இது எப்போது நடந்தது என்றும், இதில் இருப்பவரின் பெயர், போன்றவற்றை பகிர்ந்திருந்தனர்.

இவற்றின் அடிப்படையில் நாம் ‘சென்னை சித்த வித்தை அப்பியாச நிலையம், D-153,ஆர்.வி. நகர் (மித்ரா எதிர்ப்புறம்), 1வது முதன்மை தெரு , அண்ணா நகர் கிழக்கு, சென்னை, தமிழ்நாடு- 600102,’ என்ற முகவரியில் செயல்படும் குறிப்பிட்ட நிலையத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர்களது அதிகாரப்பூர்வ இணையதளத்திலேயே தொடர்பு எண் தரப்பட்டிருந்தது.

இந்த வீடியோவில் தாடியுடன் பேசும் நபரின் பெயர் சித்த வித்தை பிரம்மஸ்ரீ கோதண்ட வேலு. இதன்படி, இவர்களுக்குச் சொந்தமாக திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில், ஜீவ சமாதி அடைய விரும்புவோருக்கு, அதற்குரிய பயிற்சி அளிப்பதும், ஜீவ சமாதி அடைவோரை அடக்கம் செய்வதும் இவர்களது பணியாக உள்ளது. அதில் ஒரு ஜீவ சமாதி தொடர்பான வீடியோதான் மேலே நாம் காண்பதும். சில வாரம் முன்பாக இந்த ஜீவ சமாதி நிகழ்ந்திருக்கிறது, என்று நமக்கு தெரியவருகிறது.

எனவே, சமீபத்தில் நிகழ்ந்த தனியார் அமைப்பு ஒன்றின் ஜீவ சமாதி நிகழ்வு வீடியோவை எடுத்து, ‘300 ஆண்டுகளுக்கு முன் சமாதியடைந்து, இன்றளவும் உயிருடன் இருக்கும் சித்தர்,’ என்று கூறி வதந்தி பரப்பியுள்ளனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதியடைந்த சித்தர் உயிருடன் கண்டுபிடிப்பா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: Partly False