நடிகர் பரத், சினிமா வாய்ப்பு இல்லாததால் ஆட்டோ ஓட்டி வருகிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

நடிகர் பரத் ஆட்டோ ஓட்டும் திரைப்பட ஸ்டில் ஒன்று ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "சினிமாவி்ல் வாய்ப்பு இல்லாத்ததால் ஆட்டோ ஓடும் நடிகர் “பரத்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நடிகர் பரத்துக்கு திரைப்பட வாய்ப்பு குறைவுதான்... ஆனால் அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். நட்சத்திரங்கள் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். ஆட்டோ ஓட்டும் அளவுக்கு அவர் நிலை செல்ல வாய்ப்பில்லை. எனவே, திரைப்பட ஸ்டில்லாக இது இருக்கலாம் என்று கருதி ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் மெட்ராஸ் (Once Upon a Time in Madras) என்ற திரைப்படத்தின் ஸ்டில்ஸ் என்று தெரியவந்தது.

இந்த புகைப்படத்தை திரைப்பட நடிகை கனிகா தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2024 மார்ச் 20ம் தேதி பதிவிட்டிருந்தார். அதில், "படப்பிடிப்பு முடிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. 2024 கோடையில் திரைக்கு வருகிறது. ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

வேறு சில ஊடகங்களும் தங்களது சமூக ஊடக பக்கங்களில் ‘திரைப்பட காட்சி இது’ என்று திரைப்படத்தின் பெயருடன் பதிவிட்டிருந்தனர்.

Archive

தன்னுடைய அடுத்த படத்துக்கு ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் மெட்ராஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது என்று கூறி நடிகர் பரத்தும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு படத்தை பதிவிட்டிருந்தார். அந்த பதிவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பட வாய்ப்பு இல்லாததால் ஆட்டோ ஓட்டும் நடிகர் பரத் என்று பரவும் புகைப்படம் திரைப்படம் ஒன்றில் வரும் காட்சி என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சினிமா வாய்ப்பு இல்லாததால் ஆட்டோ ஓட்டும் நடிகர் பரத் என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False