சூர்யா நடத்தும் அகரம் அறக்கட்டளையில் வரி ஏய்ப்பு: ஃபேஸ்புக் வதந்தி

சமூக ஊடகம் | Social

‘’எங்கள் அறக்கட்டளையில் வரி ஏய்ப்பு நடந்ததற்கு நான் பொறுப்பல்ல,’’ என்று சூர்யா கூறியதாகச் சொல்லி வைரலாகப் பரவி வரும் ஒரு ஃபேஸ்புக் தகவலை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\suriya 2.png

Facebook Link I Archived Link

Vel Murugan என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை ஜூலை 20, 2019 அன்று வெளியிட்டுள்ளார். அதில், சூர்யா பற்றி பாலிமர் டிவி வெளியிட்ட செய்தியை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ அப்போ… மோடி ஒழிகனு சொல்றவன் எவனும் நாணயமா இல்ல…???,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
நடிகர் சூர்யா மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை பற்றியும், இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வுகள் பற்றியும் சமீபத்தில் காட்டமாக விமர்சித்து பேசியிருந்தார். இதன்பேரில், நாள்தோறும் அவரை பற்றி புதுப்புது வதந்திகள் பரவி வருகின்றன. அத்துடன் அவரது பேச்சிற்கு பலரும் கண்டனம் தெரிவிக்கின்றனர். இதுபற்றி நாம் ஏற்கனவே வெளியிட்ட செய்திகளை படிக்க இங்கே 1 மற்றும் இங்கே 2 கிளிக் செய்யவும்.

இந்நிலையில்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியாகியுள்ளது. இதில் கூறியுள்ளதுபோல, சூர்யா கூறியது பற்றி பாலிமர் டிவி ஏதேனும் செய்தி வெளியிட்டதா என ஆதாரம் தேடினோம்.

இதன்படி, பாலிமர் நியூஸ் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் சென்று ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, நீட் தேர்வு பற்றி சூர்யா கூறிய கருத்து பற்றி பாலிமர் டிவி வெளியிட்ட செய்தி ஆதாரம் கிடைத்தது.

C:\Users\parthiban\Desktop\suriya 3.png

அதாவது, நீட் தேர்வு வந்த பிறகு, தனது அகரம் அறக்கட்டளையில் படிக்கும் மாணவர்களை மருத்துவப் படிப்பில் சேர்க்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, சூர்யா வேதனை தெரிவித்துள்ளார். இதுதான் பாலிமர் டிவி வெளியிட்ட செய்தியாகும். 

C:\Users\parthiban\Desktop\suriya 4.png

Facebook Link I Archived Link

அதனை தவறாக சித்தரித்து, இவர்களாக ஒரு போலி நியூஸ் கார்டு தயாரித்து பரப்பியுள்ளனர் என தெளிவாகிறது. இதுபற்றி பாலிமர் டிவி வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறாகச் சித்தரிக்கப்பட்ட ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சூர்யா நடத்தும் அகரம் அறக்கட்டளையில் வரி ஏய்ப்பு: ஃபேஸ்புக் வதந்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: False