பெட்ரோல் விலை உயர்வை கைதட்டி வரவேற்ற மோடி?- எடிட் செய்யப்பட்ட வீடியோவால் குழப்பம்!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

டோக்கிய ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய தேசியக் கொடி ஏந்தி வந்த நமது வீரர்களை பிரதமர் மோடி எழுந்து நின்று கைத்தட்டி உற்சாகப்படுத்திய வீடியோவை எடிட் செய்து சமூக ஊடகங்களில் சிலர் பகிர்ந்து வருகின்றனர்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர்பாக சன் நியூஸ் தொலைக்காட்சியின் செய்தியை பிரதமர் மோடி பார்ப்பது போலவும், பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது என்ற போது எழுந்து நின்று கைதட்டியது போலவும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

உண்மை அறிவோம்:

பெட்ரோல் விலை உயர்வு செய்தியை பிரதமர் மோடி கைதட்டி வரவேற்றார் என்பது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. டி.வி-யில் வரும் காட்சிக்கும், அருகில் கண்ணாடியில் தெரியும் காட்சிக்கும் வித்தியாசம் உள்ளது. இது உண்மையானது என்று நினைத்து பலரும் பகிர்கிறார்களா என்று தெரியவில்லை. இந்த வீடியோ உண்மையானதா, போலியானதா என்று மட்டுமே ஆய்வு செய்தோம்.

Archive I dinamalar.com I Archive 2

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா ஜூலை 23, 2021 அன்று தொடங்கியது. தொடக்க விழாவின் போது இந்திய வீரர்கள் தேசிய கொடியோடு அணிவகுத்து வந்த காட்சியை பிரதமர் மோடி தன்னுடைய அலுவலகத்தில் இருந்து வீடியோ வாயிலாக பார்த்த வீடியோ வெளியாகி இருந்தது. அதில், இந்திய வீரர்கள் தேசியக் கொடியோடு அணிவகுத்து வரும்போது பிரதமர் மோடி எழுந்து நின்று கைதட்டி வரவேற்றார். இது தொடர்பான செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.

Twitter I Archive

இந்த நிலையில் அதே வீடியோவில் சன் நியூஸ் ஓடுவது போலவும், அந்த செய்தியில் பெட்ரோல் விலை உயர்வு பற்றி பேசுவதாகவும், ரூ.100ஐ கடந்தது பெட்ரோல் என்ற போது பிரதமர் மோடி எழுந்து நின்று கை தட்டுவது போலவும் காட்சி இருந்தது. இது போலியான வீடியோ என்று தெரிந்தும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

பிரதமர் மோடியின் அசல் வீடியோவைத் தேடினோம். ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து முன்னணி ஊடகங்களிலும் அந்த வீடியோ வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. இந்த வீடியோவை எடுத்து சன் நியூஸ் செய்தியை அதனுடன் சேர்த்து வீடியோ எடிட் செய்திருப்பது உறுதியானது. இதன் அடிப்படையில், நகைச்சுவைக்காக பகிரப்பட்ட இந்த வீடியோவை சிலர் உண்மை போல நினைத்து பகிர்கின்றனர் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பெட்ரோல் விலை உயர்வை கைதட்டி வரவேற்ற பிரதமர் என்று பகிரப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பெட்ரோல் விலை உயர்வை கைதட்டி வரவேற்ற மோடி?- எடிட் செய்யப்பட்ட வீடியோவால் குழப்பம்!

Fact Check By: Chendur Pandian 

Result: Satire