
‘’ஜாக்கி சான் தனது கஷ்டத்தை மகளுக்கு திரையிட்டுக் காட்டினார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
Facebook Claim Link l Archived Link
பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோ உண்மையா என்றறிய நாம் கூகுள் உதவியுடன் இதில் வரும் காட்சி ஒன்றை எடுத்து, ரிவஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது நிஜமானது அல்ல என்றும், சினிமா ஒன்றில் வரும் காட்சி என்றும் தெரியவந்தது.
இந்த வீடியோ முதலில் ஒரு யூடியுப் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்தே பலரும் இதனை உண்மை என நினைத்து இன்று வரை ஷேர் செய்து வருகின்றனர். ஆனால், முதன்முதலில் இதனை வெளியிட்ட யூடியுப் சேனல் தரப்பில் இது Ride On என்ற திரைப்படத்தில் வரும் காட்சி என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, இந்த படத்தில் ஜாக்கி சான் மகளாக நடித்திருப்பவர் Haocun Liu என்பதும், இவர் உண்மையான மகள் இல்லை என்பதும் தெளிவாகிறது.
அடுத்தப்படியாக, ஜாக்கி சானுக்கு உண்மையில் மகள் உள்ளாரா என்றால், ஆம் இருக்கிறார். திருமணம் கடந்து பெண் ஒருவருடன் ஜாக்கி சானுக்கு ரகசிய தொடர்பு இருந்துள்ளதாகவும், அதன்மூலமாக பிறந்தவர்தான் Etta Ng எனவும் ஜாக்கி சானே வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார். அவரது மகள், ஓரினச் சேர்க்கையாளராக தன்னை பிரகடனப் படுத்தி வருகிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
The Star Link l 8days.sg link l Yahoo News Link
உண்மையான மகளையும், திரைப்படத்தில் வரும் காட்சியையும் ஒப்பீடு செய்து கீழே இணைத்துள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பற்றிய தகவல் தவறான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title: ஜாக்கி சான் தனது கஷ்டத்தை மகளுக்கு திரையிட்டுக் காட்டினாரா?
Written By: Fact Crescendo TeamResult: False
