மதுரை மத்திய தொகுதியில் இறைச்சி விற்பனையை தடை செய்வேன் என்று சுந்தர்.சி கூறினாரா?  

False அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India தமிழகம் | Tamil Nadu

‘‘மதுரை மத்திய தொகுதியில் இறைச்சி விற்பனையை தடை செய்வேன்,’’ என்று சுந்தர்.சி கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’நான் வெற்றி பெற்று வந்தால் புனிதத்தலமான மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ள மதுரை மத்திய தொகுதியில் இறைச்சி விற்பனையை தடை செய்து கோவில் நகரத்தின் புனிதத்தை பாதுகாப்பேன்- சுந்தர்.சி, மதுரை மத்தி தொகுதி NDA வேட்பாளர்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 l Archived Link        

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது சுந்தர். சி பெயரில் பகிரப்படும் போலியான செய்தி, என்று தெரியவந்தது. 

இதுதொடர்பாக, சுந்தர். சி ஏற்கனவே மறுப்பு கூறி, X வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி, தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: மதுரை மத்திய தொகுதியில் இறைச்சி விற்பனையை தடை செய்வேன் என்று சுந்தர்.சி கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer

Result: False

Leave a Reply