கனியாமூர் தனியார் பள்ளி பிரச்னை பற்றி நடிகைகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை செய்தாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

சின்ன சேலம் தனியார் பள்ளி பிரச்னை பற்றி நடிகைகளுடன் ஆலோசித்த உதயநிதி ஸ்டாலின் என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
சமீபத்தில் சின்ன சேலம் அருகே கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, உள்ளூர் பொது மக்கள் அந்த பள்ளியை அடித்து நொறுக்கியதால், இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதிக்கப்படுகிறது.

The Hindu Tamil Link I Puthiyathalaimurai Link

இந்த சூழலில், மேற்கண்ட விவகாரத்தால் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது. அதேசமயம், அதனை பற்றி பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனும், திமுக எம்எல்ஏ மற்றும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நடிகைகளுடன் சேர்ந்து ஊர் சுற்றி மகிழ்வதாகக் குறிப்பிட்டு சிலர் மேற்கண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர்.

ஆரம்பத்தில், சவுக்கு சங்கர் போன்றோர் கேலி, கிண்டல் செய்யும் அளவில் இந்த புகைப்படத்தை வெளியிட்டனர்.

சவுக்கு சங்கர் சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டு வருவதால், அவரது பழைய ட்விட்டர் ஐடி தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மேற்கண்ட ஐடியும் தடை செய்யப்படுமோ என்ற ஐயம் உள்ளதால், அவர் வெளியிட்ட பதிவை ஸ்கிரின்ஷாட் எடுத்து, கீழே இணைத்துள்ளோம்.

ஆனால், போகப் போக சமூக வலைதள பயனாளர்கள் பலரும் இதனை உண்மை போலவே பகிர தொடங்கியுள்ளனர்.

உண்மையில், இந்த புகைப்படம் கனியாமூர் பள்ளி விவகாரம் வெளிவந்த பின் எடுக்கப்பட்டதல்ல. மாறாக, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் வெற்றி விழாவின்போது, எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் பலவும் ஆன்லைனில் காணக் கிடைக்கின்றன.

எனவே, ஒரு சிலர் அரசியல் விமர்சனத்திற்காக கேலி செய்து இந்த புகைப்படத்தை பகிர, மற்றவர்கள் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் குறிப்பிட்ட புகைப்படத்தை பகிர்வதாக, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:கனியாமூர் தனியார் பள்ளி பிரச்னை பற்றி நடிகைகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை செய்தாரா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False

Leave a Reply