ஓபிஎஸ் கூட்டத்தின் குலத்தொழில் திருடுவது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
திருடுவதுதான் ஓ.பன்னீர்செல்வம் சார்ந்த சமூகத்தினரின் குலத்தொழில் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
உண்மை அறிவோம்:
ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், சசிகலாவை வெளியேற்றி விட்டு, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றிணைந்து, 4 ஆண்டுகள் அதிமுக.,வை தலைமையேற்று, தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தி வந்தனர்.
கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்த பின், அதிமுக.,வில் ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்தது. இதன்பேரில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே எழுந்த கோஷ்டி மோதல், உட்கட்சிப் பூசலாக மாறியது.
தற்போதைய சூழலில், யார்தான் உண்மையான அதிமுக என்ற குழப்பம் ஒருபக்கம் நிலவுகிறது. அதேசமயம், எடப்பாடி பழனிசாமிதான் அடுத்த பொதுச் செயலாளர் என்றும் கூறி, அதிமுக பொதுக்குழுவில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதிருப்தியடைந்த ஓபிஎஸ் தரப்பு, அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால், வன்முறையை தவிர்க்கும் வகையில், அக்கட்சி தலைமை அலுவலகத்திற்கு தமிழ்நாடு அரசு சீல் வைத்தது. இதன்பேரில், நீதிமன்றத்தில் முறையீடு செய்து, அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி திரும்பப் பெற்றுள்ளார்.
இந்த சூழலில்தான் மேற்கண்ட வகையில், ஓபிஎஸ் சார்ந்த கள்ளர் சமூகத்தை குறிவைத்து, எடப்பாடி பழனிசாமி பேசியதாகச் சிலர் செய்தி பகிர்ந்து வருகின்றனர். ஆனால், உண்மையில் அவர் எப்படி எதுவும் கூறவில்லை. இப்படி எந்த செய்தியும் பாலிமர் டிவி வெளியிடவும் இல்லை. அவர்கள் வெளியிட்ட உண்மையான செய்தி லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:ஓபிஎஸ் கூட்டத்தின் குலத்தொழில் திருடுவது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False