‘’ கங்கை நதி இறங்கும் அற்புத காட்சி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Facebook Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட வீடியோ உண்மையா என்றறிய நாம் கூகுள் உதவியுடன் இதில் வரும் காட்சி ஒன்றை எடுத்து, ரிவஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது இந்தியாவில் எடுக்கப்பட்ட காட்சி அல்ல என்றும், நியூஸிலாந்து நாட்டில் உள்ள அருவி ஒன்றை பற்றிய காட்சி என்றும் தெரியவந்தது.

இதனை முதலில், இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் rajdeep_jimmy என்ற ஐடி கொண்ட நபர் பகிர்ந்துள்ளதாகக் கண்டோம்.

அவர், இதனை chikkamagalur என்று குறிப்பிட்டு பகிர்ந்திருந்தாலும், பிறகு உண்மையை உணர்ந்து, இந்த இடம் Milford sound என திருத்தம் செய்துள்ளார்.

மேற்கண்ட பதிவின் முழு லிங்க் கூடுதல் ஆதாரத்திற்காகக் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, நாம் Milford Sound Piopiotahi என்பது பற்றி விவரம் தேடியபோது, இது நியூஸிலாந்து நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று என தெரியவந்தது.

மேலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ காட்சி, milford sound highway water falls என்ற கீவேர்ட் பயன்படுத்தி தேடும்போது நம்மால் கூகுளில் காண முடிகிறது.

இதுபற்றிய மற்றொரு வீடியோ ஆதாரத்தையும் கீழே இணைத்துள்ளோம்.

எனவே, நியூஸிலாந்து நாட்டில் பாயும் அருவி ஒன்றின் வீடியோ காட்சியை எடுத்து, கங்கை நதி இறங்கும் காட்சி என்று கூறி வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title: கங்கை நதி இறங்கும் அற்புத காட்சி என்று பரவும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

Written By: Fact Crescendo Team

Result: False