
‘’சீமானோடு விவாதிக்க தயாராக இல்லை’’, என்று ஒளிப்பதிவாளர் சந்தோஷ்’ மறுப்பு கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ சீமானோடு விவாதிக்க தயாராக இல்லை! பிரபாகரன் – சீமான் சந்திப்பு குறித்து நியூஸ் 18-க்கு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் கொடுத்த நேர்காணலைத் தொடர்ந்து, அவருடன் நேருக்கு நேர் விவாதிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சீமானோடு விவாதிக்க எதுவும் இல்லை, என மறுப்பு தெரிவித்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ்!’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு என்று தெரியவந்தது. “பிரபாகரனுக்கு சீமான் யார் என்றே அப்போது தெரியாது… அன்று நடந்தது இதுதான்’’ என்று கூறி, எல்லாளன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த எஸ்.ஆர்.சந்தோஷ் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார்.
இதனையடுத்து, சந்தோஷ் உடன் நேருக்கு நேர் விவாதிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விருப்பம் தெரிவித்துள்ளார் என்றும், அந்த விவாதத்தை ஒருங்கிணைக்க தயாராக உள்ளோம் என்றும் கூறி நியூஸ் 18 ஊடகம் சமூக வலைதளங்களில் பதிவிட்டது.
இந்நிலையில் சீமானோடு விவாதிக்க எதுவும் இல்லை, என ஒளிப்பதிவாளர் சந்தோஷ் மறுப்பு தெரிவித்துள்ளதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் பரவுகிறது. ஆனால், ‘’இதனை நியூஸ் 18 தமிழ் வெளியிடவில்லை,’’ என்று அவர்கள் தரப்பில் மறுப்பு கூறப்பட்டுள்ளது. இதுபற்றி நியூஸ் 18 தமிழ் ஆசிரியர் குழுவிடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:சீமானோடு விவாதிக்க தயாராக இல்லை என்று ஒளிப்பதிவாளர் சந்தோஷ் கூறினாரா?
Written By: Pankaj IyerResult: Altered
