‘’ரூ.15 லட்சம் வென்ற கல்லூரி மாணவர்,’’ என்று நியூஸ் 7 தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் 15 லட்சத்தை வென்றுள்ளார்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link

நியூஸ் 7 தமிழ் லோகோவுடன் உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி பற்றி, நாம் தகவல் தேடியபோது, இதற்கும், நியூஸ் 7 தமிழ் ஊடகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரியவந்தது.

ஆம், ‘குறிப்பிட்ட செய்தியை நாங்கள் வெளியிடவில்லை,’ என்று கூறி ஏற்கனவே நியூஸ் 7 தமிழ் ஊடகம் சார்பாக மறுப்பு கூறப்பட்டுள்ளது.

News7Tamil FB Post

இதுதொடர்பாக, நாம் நியூஸ் 7 தமிழ் ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடமும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். ‘’ ஆன்லைன் புரோமோஷனுக்காக, எங்களது லோகோவை ‘99 Lotto’ முன் அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளது,’’ என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தியை நியூஸ் 7 தமிழ் ஊடகம் வெளியிடவில்லை, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:ரூ.15 லட்சம் வென்ற கல்லூரி மாணவர் என்று நியூஸ் 7 தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டதா?

Fact Check By: Fact Crescendo Team

Result: Altered