சென்னை ஃபார்முலா கார் ரேஸில் நிவேதா பெத்துராஜ் பங்கேற்றாரா?
சென்னையில் நடந்த பார்முலா 4 கார் ரேசில் நடிகை நிவேதா பெத்துராஜ் பங்கேற்றது போன்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை நிவேதா பெத்துராஜ் தன்னுடைய (பார்முலா போட்டி) காரை அறிமுகம் செய்கிறேன் என்று கூறிய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "பார்முலா 4 கார் பந்தயத்தின் களம் இறங்கிய நடிகை நிவேதா பெத்துராஜ் " […]
சென்னையில் நடந்த பார்முலா 4 கார் ரேசில் நடிகை நிவேதா பெத்துராஜ் பங்கேற்றது போன்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நடிகை நிவேதா பெத்துராஜ் தன்னுடைய (பார்முலா போட்டி) காரை அறிமுகம் செய்கிறேன் என்று கூறிய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "பார்முலா 4 கார் பந்தயத்தின் களம் இறங்கிய நடிகை நிவேதா பெத்துராஜ் " என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கு இடையே சென்னையில் பார்முலா 4 கார் பந்தய போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த போட்டி சென்னையில் நடக்க நடிகை நிவேதா பெத்துராஜ் தான் காரணம் என்பது போன்று பலரும் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் இந்த போட்டியில் பங்கேற்க வந்தது போன்று மேற்கண்ட வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: sportstar.thehindu.com I Archive
முதலில் இந்த போட்டியில் நடிகை நிவேதா பெத்துராஜ் பங்கேற்கவே இல்லை. போட்டியில் பங்கேற்றவர்கள் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதில் நிவேதா பெத்துராஜ் பெயர் இல்லை. அதையும் மீறி நிவேதா பெத்துராஜ் பங்கேற்றிருந்தால் ஊடகங்களில் அது மிகப்பெரிய செய்தியாக வந்திருக்கும். போட்டியில் பங்கேற்கவோ, விழாவில் சிறப்பு விருந்தினராகவோ கூட அவர் பங்கேற்கவில்லை என்பதைச் செய்தி தொலைக்காட்சி பார்த்திருந்தால் அல்லது தினமும் செய்தித்தாள் வாசித்திருந்தால் கூட தெரிந்திருக்கும்.
அடுத்ததாக நிவேதா பெத்துராஜ் ஃபார்முலா 4 கார் பந்தயங்களில் பங்கேற்கிறாரா என்று தேடிப் பார்த்தோம். அவர் ஃபார்முலா 1 போட்டிகளில் பங்கேற்கப் பயிற்சி பெற்றதாக வீடியோக்கள் பல கிடைத்தன. ஃபார்முலா 4 என்பது தொடக்க நிலை, இளம் வீரர்களுக்கானது என்றும் ஃபார்முலா 1 என்பது ஃபார்முலா பந்தயங்களில் மிகவும் உயர்ந்த நிலை கொண்டது என்றும், அனுபவம் மிக்கவர்கள் பங்கேற்பது என்றும் தெரியவந்தது. எனவே, ஃபார்முலா 1ல் பங்கேற்கும் நிவேதா பெத்துராஜ் ஃபார்முலா 4ல் பங்கேற்க வாய்ப்பு இல்லை.
அடுத்ததாக இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று அறிய ஆய்வு தொடர்ந்தோம். 2021ம் ஆண்டு இந்த வீடியோ யூடியூபில் பதிவிடப்பட்டிருந்தது தெரியவந்தது. அதாவது சென்னை ஃபார்முலா 4 போட்டி நடப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இப்போது ஃபார்முலா 4 போட்டியில் பங்கேற்றதாகத் தவறாகப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2021ம் ஆண்டு நடிகை நிவேதா பெத்துராஜ் எடுத்துக்கொண்ட பார்முலா கார் பந்தய பயிற்சி வீடியோவை 2024 சென்னை பார்முலா 4 கார் பந்தயத்தில் பங்கேற்க வந்ததாக தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:சென்னை ஃபார்முலா கார் ரேஸில் நிவேதா பெத்துராஜ் பங்கேற்றாரா?
Written By: Chendur PandianResult: False