ஜெர்மன் நிதியமைச்சர் தற்கொலை செய்துகொண்டாரா?

Coronavirus உலகச் செய்திகள் சமூக ஊடகம்

‘’ஜெர்மன் நிதியமைச்சர் தற்கொலை செய்துகொண்டார்,’’ என்று கூறி பகிரப்படும் பல்வேறு செய்திகளை சமூக ஊடகங்கள் வாயிலாகக் காண நேரிட்டது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி இப்போது பார்க்கலாம்.

தகவலின் விவரம்:

FB Claim LinkArchived Link 1News 18 Tamil LinkArchived Link 2

இதேபோல, ஏசியாநெட் நியூஸ் தமிழ் ஊடகமும் செய்தி வெளியிட்டிருந்தது. அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. 

FB Claim Link Archived Link 1Asianet Tamil NewsArchived Link 2

ஜெர்மன் நிதியமைச்சர் தாமஸ் தற்கொலை என்ற இந்த செய்திகளில் திரும்ப திரும்ப குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இவர்கள் குறிப்பிடுவது போல தற்கொலை செய்துகொண்டவர், ஜெர்மனி நாட்டின் நிதியமைச்சர் கிடையாது. ஜெர்மனியில் உள்ள Hesse என்ற மாகாணத்தின் நிதியமைச்சர் ஆவார். இந்த வித்தியாசம் கூட புரியாமல் முன்னணி ஊடகத்தினர் இவ்வாறு செய்தி வெளியிட்டு சமூக ஊடகப் பயனாளர்களை குழப்பியுள்ளனர். 

இதே செய்தியை மற்ற தமிழ் ஊடகங்கள் எப்படி வெளியிட்டுள்ளன என்று உதாரணத்திற்காக பார்க்கலாம். 

OneIndia Tamil LinkArchived Link
Dinakaran News Link Archived Link

மற்ற ஊடகங்கள் தெளிவாகவே, தலைப்பு முதற்கொண்டு அனைத்திலும் தற்கொலை செய்துகொண்டவர் ஜெர்மனியில் உள்ள ஒரு மாகாணத்தின் முதலமைச்சர் என்றே குறிப்பிட்டுள்ளனர். ஆனால், நாம் ஆய்வு செய்யும் செய்திகளில் மட்டும் அவரை ஜெர்மனி நாட்டிற்கே நிதியமைச்சர் என்பது போல தவறாகக் கூறியுள்ளனர்.

இதுதவிர, ஜெர்மனி நாட்டின் நிதியமைச்சர் நலமுடன்தான் உள்ளார். அவரது பெயர் Olaf Scholz

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், இறந்தவர் ஜெர்மனியின் நிதியமைச்சர் என்று கூறி ஃபேஸ்புக் வாசகர்களை குழப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகளில் முழு உண்மை இல்லை என்று உறுதி செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.