ஶ்ரீபெரும்புதூர் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் சிலர் லாங் ஜம்ப் போட்டி நடப்பது போல் வீடியோ எடுத்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

எமன் மற்றும் சித்ரகுப்தன் வேடம் அணிந்த சிலர் சாலையில் உள்ள பள்ளத்தில் லாங் ஜம்ப் எனப்படும் நீளம் தாண்டுதல் போட்டியை நடத்தியது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "திருப்பெரும்பூதூரின் சாலைகள் Long Jump போட்டிக்குத் தயார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பெங்களூரூவில் உள்ள பள்ளத்தில் நிலவில் நடப்பது போன்று வீடியோ எடுத்து வைரல் ஆக்கினர். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் சாலையில் உள்ள பள்ளத்தில் எமன் மற்றும் சித்திரகுப்தன் வேடம் அணிந்து சிலர் நீளம் தாண்டுதல் போட்டி நடத்துவது போன்ற வீடியோ எடுத்ததாகச் செய்திகள் வெளியாகின. எப்படியும் சில மாதங்களில் இந்த வீடியோவை தமிழ்நாட்டில் உள்ள சாலையின் நிலை என்று யாராவது வதந்தி பரப்புவார்கள் என்று எதிர்பார்த்தோம்... ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் அது நடக்கும் என்று நினைக்கவில்லை.

https://twitter.com/poojary2024/status/1828436024651063480

Archive

ஶ்ரீபெரும்புதூரில் உள்ள சாலையில் உள்ள பள்ளத்தில் எமன் வேடம் அணிந்து நீளம் தாண்டுதல் போட்டி நடந்தது என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ கர்நாடகாவில் எடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்களைத் தேடி எடுத்தோம். முதலில் வீடியோவில் பேசுகிறவர்கள் கன்னட மொழியில் பேசுவதைத் தெளிவாகக் கேட்க முடிகிறது. மேலும், அந்த பகுதியில் உள்ள கட்டிடங்களில் கன்னட மொழியில் எழுதப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. இவை எல்லாம் இந்த வீடியோ கர்நாடகாவைச் சார்ந்தது என்பதை உறுதி செய்கின்றன.

உண்மைப் பதிவைக் காண: livemint.com I Archive 1 I abplive.com I Archive 2

இது தொடர்பாக வெளியான செய்திகளைப் பார்த்தோம். உடுப்பி - மால்பே சாலை (Udupi-Malpe road) குண்டும் குழியுமாக இருப்பதால் அதை சரி செய்ய வலியுறுத்தி எமன் மற்றும் சித்திரகுப்தன் வேடம் அணிந்து நீளம் தாண்டுதல் போட்டி நடத்தப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். இவை எல்லாம் இந்த வீடியோ தமிழ்நாட்டைச் சார்ந்தது இல்லை என்பதை உறுதி செய்கின்றன. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கர்நாடக மாநிலம் உடுப்பியில் எடுக்கப்பட்ட வீடியோவை ஶ்ரீபெரும்புதூரில் எடுக்கப்பட்டது என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நீளம் தாண்டுதலுக்கு தயாராக இருக்கும் ஶ்ரீபெரும்புதூரின் குண்டும் குழியுமான சாலைகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False