
‘‘பதவியில் இல்லாமலேயே திமுக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற செந்தில் பாலாஜி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’கூட்டம் தொடங்கியது. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறும் திட்டங்கள், அதற்கான செலவுகள் தொடர்பாக ஆலோசனை’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Archived Link
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது பழைய புகைப்படம் என்றும், தவறுதலாக அவசர கதியில் இதனை ஊடகங்கள் பகிர்ந்துள்ளன என்றும் தெரியவந்தது.

அதேசமயம், மேலும் சில ஊடகங்கள் சரியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளதைக் கண்டோம்.

இதன்படி, உண்மையான புகைப்படத்தில் ‘’ செந்தில் பாலாஜி இல்லாதது, துரைமுருகன் அணிந்துள்ள சட்டையின் நிறம், உதயநிதி பின்னால் நிற்கும் பெண், மு.க.ஸ்டாலின் கண்ணாடி கழட்டியபடி இருப்பது,’’ உள்ளிட்ட வேறுபாடுகளை தெளிவாகக் காணலாம்.
இந்த வேறுபாடு தெரியாமல் கடந்த 2024ம் ஆண்டு ஊடகங்களில் ஏற்கனவே வெளியான புகைப்படத்தை, தவறுதலாக சில ஊடகங்கள் பகிர்ந்து, குழப்பம் ஏற்படுத்தியுள்ளது, தெளிவாகிறது.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தியில் தவறான புகைப்படம் இடம்பெற்றுள்ளது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:திமுக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற செந்தில் பாலாஜி என்று பரவும் பழைய புகைப்படத்தால் சர்ச்சை…
Fact Check By: Pankaj IyerResult: False


