
‘’கொரோனா ஊரடங்கு நாளை முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிப்பு,’’ என்று கூறி புதிய தலைமுறை பெயரில் பரவும் செய்தியை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

‘’தமிழ்நாட்டில் நாளை முதல் 30ம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் திடீர் பரபரப்பாக மேற்கண்ட செய்தி பகிரப்பட்டு வருகிறது.
இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளதால், உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி நம்மிடம் வாசகர்கள் பலரும் கேட்டுக் கொண்டனர்.
உண்மை அறிவோம்:
கொரோனா வைரஸ் தொற்று 2020ம் ஆண்டில் உலகம் முழுக்க பரவி, இயல்பு வாழ்க்கையை முடக்கியதை யாரும் எளிதில் மறக்க முடியாது. இந்நிலையில், தமிழ்நாட்டில் தற்போது சட்டமன்ற தேர்தல் 2021 சூடுபிடித்துள்ளது. அதேசமயம், ஆங்காங்கே கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளதாகக் கூறி ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது.
Hindu Tamil Link I BBC Tamil Link
இந்நிலையில்தான், புதிய தலைமுறை பெயரில் மேற்கண்ட செய்தியும் பரபரப்பாக சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. ஆனால், இது 2020 ஜூன் மாதத்தில் புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்ட செய்தியாகும். தற்போது அல்ல; அந்த செய்தி லிங்கை கீழே இணைத்துள்ளோம்.
பழைய செய்தியை எடுத்து, தங்களது பெயரில் சமூக வலைதளங்களில் சிலர் புதியது போல வதந்தி பரப்புவதைக் கண்ட புதிய தலைமுறை ஊடகம், உடனடியாக இதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளது.
இதுபற்றி தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் புதிய தலைமுறை விளக்கம் அளித்திருக்கிறது. அதன் லிங்கை கீழே இணைத்துள்ளோம்.

Puthiyathalaimurai FB Post Link
எனவே, புதிய தலைமுறை 2020ம் ஆண்டில் வெளியிட்ட செய்தியை எடுத்து, தவறுதலாக, தற்போது நிகழ்ந்ததைப் போல ஃபேஸ்புக்கில் பகிர்ந்து, சமூக வலைதள வாசகர்களை குழப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:கொரோனா ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வருகிறதா?- புதிய தலைமுறை பெயரில் பரவும் வதந்தி
Fact Check By: Pankaj IyerResult: False
