
‘‘மு.க.ஸ்டாலின் காலில் விழுந்த ஓபிஎஸ்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ இன்று புதிய கொத்தடிமை ஒன்று திமுகவில் இணைகிறது…
O Panneerselvam ’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Archived Link
புதிய தலைமுறை லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படம் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, ‘’இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம்,’’ என்று தெரியவந்தது.
ஆம், ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது பற்றி மு.க.ஸ்டாலின் அவரது அதிகாரப்பூர்வ X வலைதள பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளார். அதில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களுக்கும், நாம் ஆய்வு செய்யும் புகைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
மேலும், இதுதொடர்பான வீடியோ செய்திகளிலும் ஓ.பன்னீர்செல்வம் நிற்பது போன்ற காட்சிகளே இடம்பெற்றுள்ளன.

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
இதுதொடர்பாக, நாம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கேட்டோம். ‘’நாங்கள் திமுகவில் இணைந்தது பற்றி வேண்டுமென்றே எதிரிகள் வதந்தி பரப்புகிறார்கள். அதில் ஒன்றுதான் காலில் விழுவது போன்ற புகைப்படம்,’’ என்று மறுப்பு தெரிவித்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் பற்றி ஏற்கனவே பல வதந்திகள் பரவியுள்ளன. நாமும் ஃபேக்ட்செக் செய்திருக்கிறோம். அவற்றை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இறுதியாக, hivemoderation, wasitai போன்ற AI சரிபார்ப்பு இணையதளங்கள் உதவியுடன் ஆய்வு செய்தபோது, மேற்கண்ட புகைப்படம் AI தொழில்நுட்பம் பயன்படுத்தி, தயாரிக்கப்பட்டதாக, தெரியவந்தது.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் உண்மையானதல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram


