
‘’மு.க.ஸ்டாலின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வேன் – சசிகலா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் சசிகலா பெயரில் பகிரப்பட்ட ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அதில், மு.க.ஸ்டாலின் பதவியேற்பில் கண்டிப்பாக கலந்துகொள்வேன், என்று சசிகலா பெயரில் பகிரப்பட்டுள்ளதால், உண்மை என்றே நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
இதன்படி, குறிப்பிட்ட ட்வீட் வெளியிட்ட ட்விட்டர் ஐடியின் விவரத்தைப் பார்த்தோம்.

குறிப்பிட்ட ட்விட்டர் ஐடியின் சுயவிவர பக்கத்தில், இது சசிகலா பெயரில் நிர்வகிக்கப்படும் ஒரு பகடியான ட்விட்டர் ஐடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஐடி வெளியிடும் அனைத்துமே உண்மையான சசிகலா பகிர்வதைப் போலவே, பலராலும் ஷேர் செய்யப்படுவதால், வீண் குழப்பம் ஏற்படுவதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஒரு போலியான ட்விட்டர் ஐடி தொடர்ச்சியாக இப்படி சசிகலா பெயரில் வதந்தி பரப்பி வருவதை எப்படி அவரது ஆதரவாளர்கள் அனுமதித்து வருகின்றனர் என்று நமக்கு ஆச்சரியம் மேலோங்கியது. இது மட்டுமல்ல, இதுபோல நிறைய ட்விட்டர் ஐடி.,க்கள் சசிகலா பெயரில் இயங்கி வருகின்றன. அவற்றில் தொடர்ச்சியாக, சசிகலாவை தொடர்புபடுத்தி தவறான தகவல்கள் பகிரப்படுவதைக் காண முடிகிறது. உண்மையான ஐடி என்று இவற்றை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் நம்பி ஏமாறுவதும் வழக்கமாக உள்ளது. இதனை சம்பந்தப்பட்டவர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுத்தால் நலம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மு.க.ஸ்டாலின் பதவியேற்பில் கலந்துகொள்வேன் என்று சசிகலா கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
