கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இளையராஜாவை சந்தித்தாரா? 

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’ கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இளையராஜாவை சந்தித்து எளிமையான முறையில் புகைப்படம் எடுத்துக் கொண்டார்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

Tweet Claim Link l Archived Link 

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட புகைப்படம் கடந்த 2017ம் ஆண்டு இளையராஜா தனது 74வது பிறந்த நாளில், ரசிகர்களுடன் நடத்திய சந்திப்பு ஒன்றில் எடுக்கப்பட்டதாகும். இந்த நிகழ்ச்சியின் வீடியோ ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.

இதுபற்றி ஊடகங்களிலும் அப்போது செய்தி வெளியாகியுள்ளது.

கூடுதல் ஆதாரத்திற்காக, நாம் இளையராஜா தரப்பிலும் பேசி இதனை உறுதிப்படுத்தியுள்ளோம். ரசிகர்கள் சந்திப்பு ஒன்றில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை தற்போது எடுத்து, ‘சுந்தர் பிச்சை மற்றும் இளையராஜா சந்திப்பு’ என்று தவறான தகவல் பரப்பியுள்ளதாகச் சந்தேகமன்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இளையராஜாவை சந்தித்தாரா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False