FACT CHECK: ஒரு ஜெபம் வாங்கினால் இன்னொன்று இலவசம் என்று பால் தினகரன் விளம்பரம் செய்தாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

ஒரு ஜெபம் வாங்கினால் இன்னொன்று இலவசம் என்று கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் விளம்பரம் செய்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வெளியிட்டது போன்ற ஆங்கிலத்தில் போஸ்டரை விமர்சித்து யாரோ ஃபேஸ்புக்கில் வெளியிட அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். 

அந்த ஆங்கில விளம்பரத்தில், “சிறப்பு சலுகை, ஒரு ஜெபம் வாங்கினால் இன்னொன்று இலவசம். பஞ்சாம் மாநிலம் அமிர்தசரஸில் பிரேயர் டவர் அமைக்கப்பட்டுள்ளது” என்று இருந்து.

விமர்சன பகுதியில் “வியாபாரத்தில் புதுமை இயக்குநர்… இயேசுகிறிஸ்து.. பொதுமேலாளர்… பால்தினகரன்.. ஒரு ஜெபத்திற்கு இன்னொரு ஜெபம் ஃப்ரீ… இதைவிட எப்படிங்க ஊழியம் செய்ய முடியும்… பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பெயரால் ஆமென்..” என்று இருந்தது. 

இந்த பதிவை BJP Tamilnadu Official என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Ramakrishnan Arumugam என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 அக்டோபர் 23ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பதிவிட்டுப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த விளம்பரம் உண்மையா என்று பார்த்தோம். பிரேயர் டவர் இன் என்ற பகுதியில் பின்புறத்தில் வெள்ளையாக இருந்த, காவி நிறத்துக்கு மாறும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருந்தது. ஆனால், சிறப்பு சலுகை பகுதி தனியாக சேர்க்கப்பட்டது போல உள்ளது. எனவே, இது உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை; அசல் போஸ்டரை தேடினோம்.

ஜீசஸ் கால்ஸ் ஃபேஸ்புக் பக்கத்துக்கு சென்று Prayer tower, amritsar என பல்வேறு கீ வார்த்தைகளை வைத்துத் தேடினோம். அப்போது 2016ம் ஆண்டு அமிர்தசரஸில் பிரேயர் டவர் திறக்கப்பட்டதாகப் பால் தினகரன் வெளியிட்ட பதிவை செய்திருந்தனர். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட போஸ்டர் அதில் இல்லை.

அசல் பதிவைக் காண: Facebook 

எனவே, பால் தினகரனின் ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த படம் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். அதிலும் பிரேயர் டவர், அமிர்தசரஸ் என கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற போஸ்டர் நமக்குக் கிடைத்தது. இந்த போஸ்டரை 2016ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி பால் தினகரன் வெளியிட்டிருந்தார். ஆனால், அதில் ஒரு ஜெபம் வாங்கினால் மற்றொன்று இலவசம் என்ற வாசகம் இல்லை.

இதன் மூலம் இது எடிட் செய்து, சமூக ஊடகங்களில் பகிரப்படும் போஸ்டர் என்பது உறுதியாகிறது.

முடிவு:

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட போஸ்டர் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஒரு ஜெபம் வாங்கினால் இன்னொன்று இலவசம் என்று பால் தினகரன் விளம்பரம் செய்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered