‘’பசும்பொன்னில் எச்.ராஜா கையெடுத்து கும்பிடவில்லை, எல்.முருகனின் கையை எடிட் செய்து, எச்.ராஜா போல அவரது ஆதரவாளர்கள் ஏமாற்றுகின்றனர்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Screenshot: FB Post for reference

Facebook Claim Link 1Archived Link 1
Facebook Claim Link 2Archived Link 2
Facebook Claim Link 3Archived Link 3
Facebook Claim Link 4Archived Link 4

இதன்படி, எச்.ராஜா மற்றும் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் ஒன்றாக நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, அவர்களின் கைகளை வட்டமிட்டுக் காட்டி, ‘ஒழுங்கா போட்டோஷாப் செய்யிறானுங்களா பாரு‘ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படத்தை நன்கு கவனித்தாலே, அதுபற்றி கூறப்படும் தகவலுக்கும், அதில் உள்ள காட்சிக்கும் தொடர்பில்லை என்பது நன்றாக புரியும். அதாவது, பசும்பொன் சென்று, முத்துராமலிங்க தேவரின் உருவச் சிலைக்கு, பாஜக தமிழக தலைவர் எச்.ராஜா, மூத்த தலைவர் எச்.ராஜா ஆகியோர் கூட்டாக வழிபாடு செய்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் மேலே நாம் கண்டதும்…

உண்மையில், இந்த புகைப்படத்தில் எடிட் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால், இது எடிட் செய்யப்பட்டது என்று கூறி, எச்.ராஜாவை விமர்சிக்கும் பலரும் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.

இதன்படி, எல்.முருகன் அரை கை வைத்த சட்டை அணிந்துள்ளார். ஆனால், எச்.ராஜா முழு கை வைத்த சட்டை அணிந்துள்ளார். இருவரது கைகளுக்கும் வித்தியாசம் தெளிவாகவே தெரிகிறது. ஆனால், முருகனின் கையை எச்.ராஜாவின் கை என்று கூறி, அது எடிட் செய்யப்பட்ட தகவல் என்று சொல்லி சிலர் விமர்சித்து வருகின்றனர். அத்துடன், எச்.ராஜா, தேவரை பார்த்துக் கும்பிடவில்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஆனால், இதுபற்றி எச்.ராஜா அவரது ட்விட்டர் பக்கத்திலேயே விளக்கம் அளித்திருக்கிறார்.

அவரது ட்வீட்டை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

Archived Link

இதுதவிர குறிப்பிட்ட காட்சி அடங்கிய செய்தி வீடியோ ஒன்றையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். அதில், தெளிவாகவே எச்.ராஜாவும், எல்.முருகனும், முத்துராமலிங்க தேவரின் உருவச் சிலை பார்த்து வணங்குவதை காண முடிகிறது. இருவரது கரங்களும் தனித்தனியாக உள்ளன. இதில் எந்த எடிட் செய்யப்பட்ட தகவலும் இல்லை என்று உறுதியாகிறது.

Archived Link

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் இது தவறான தகவல் என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:எச்.ராஜா மற்றும் எல்.முருகனின் ‘கை’ எடிட் செய்யப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer

Result: False