FactCheck: பாஜக.,வினரை மிரட்டி லஞ்சம் வாங்கினாரா அண்ணாமலை?- பாலிமர் நியூஸ் பெயரில் பரவும் வதந்தி…

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’பாஜக.,வினரை மிரட்டி பல கோடி ரூபாய் வாங்கிய அண்ணாமலை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்:

பாலிமர் நியூஸ் லோகோவுடன் உள்ள இந்த செய்தியை, வாசகர் ஒருவர் +919049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார்.

Twitter Claim Link I Archived Link

இதன்பேரில் நாமும் ஆய்வு செய்ய தொடங்கினோம்.

உண்மை அறிவோம்:
பாஜக.,வில் பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தொடர்பான ஆபாச வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்திருந்தார்.

News 18 Tamil Link I OneIndia Tamil Link

இந்த வீடியோ விவகாரத்தில், பாஜக தலைவராக உள்ள அண்ணாமலைக்கு தொடர்பு உள்ளதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த பின்னணியில்தான், மேற்கண்ட நியூஸ் கார்டு பாலிமர் லோகோவுடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ஆனால், இது உண்மையில் பாலிமர் நியூஸ் ஊடகம் வெளியிட்டதில்லை. இதுபற்றி அவர்களது டிஜிட்டல் பிரிவை தொடர்பு கொண்டு நாம் பேசியபோது, ‘’இது எங்களது லோகோ பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள போலியான செய்தி. இப்படி எதுவும் நாங்கள் சமீபத்தில் வெளியிடவில்லை,’’ என்று விளக்கம் அளித்தனர்.

எனவே, பாலிமர் நியூஸ் பெயரில் கே.டி.ராகவன், அண்ணாமலை புகைப்படத்துடன் பகிரப்படும் மேற்கண்ட நியூஸ் கார்டு போலியானது என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:பாஜக.,வினரை மிரட்டி லஞ்சம் வாங்கினாரா அண்ணாமலை?- பாலிமர் நியூஸ் பெயரில் பரவும் வதந்தி…

Fact Check By: Pankaj Iyer 

Result: False