
‘’முருக பக்தர்கள் மாநாட்டிற்காக மதுரையில் திரண்ட கூட்டம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ இது பெரியார் மண் இல்லை…
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மண்…
இன்றே நிரம்பி வழியும் வாகனம்… 🔥
மதுரை 🚩🔥
#MuruganManadu,” என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா, என்று தகவல் தேடினோம். அப்போது, இதற்கும், மதுரையில் சில நாட்கள் முன்பு நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று தெரியவந்தது.
The Hindu l Hindustan Times l Organiser l The News Minute
குறிப்பிட்ட வீடியோ, மாமல்லபுரத்தில் நடைபெற்ற பாமக சித்திரை முழு நிலவு மாநாடு 2025ல் எடுக்கப்பட்ட ஒன்று.
இதன்படி, கடந்த மே மாதம் 11, 2025 அன்று செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பாமக சார்பில், சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. இதில், பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக, லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
குறிப்பிட்ட பாமக சித்திரை முழுநிலவு மாநாட்டிற்கு வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த காட்சியை வீடியோ எடுத்து, பாமக நிர்வாகி ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இதனை எடுத்து, மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டுடன் தொடர்புபடுத்தி, சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புகிறார்கள்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ எடிட் செய்யப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வந்த கூட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
