‘’தலைக்கவசம் அணிவது, அவர்களின் தனிப்பட்ட விருப்பம், ஹெல்மெட் அணியாதவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கக்கூடாது,’’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவலை, லெட்டர் பேட் ஒன்றில் உள்ளதுபோல பகிர்ந்துள்ளனர். அந்த லெட்டர் பேட் மேலே, Indian national human rights organisation – Chennai virugambakkam என்று உள்ளது. அதற்குக் கீழே, ‘’FLASH NEWS- தமிழக அரசு செய்தி. தலை கவசம் ( ஹெல்மெட் ) அணிவது , அவர்களின் தனிப்பட்ட விருப்பம் . உயிரின் மேல் விருப்பம் உள்ளவர்கள் அணிந்துகொள்ளட்டும். ஹெல்மெட் அணியாதவர்களின் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என காவல்துறைக்கு முதல்வர் உத்தரவு… ஹெல்மெட்டுக்காக காவல்துறை அபராதம் கேட்டால் +918344606680 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். அனைத்து குரூப்பிர்க்கும் பகிரவும்,’’ என்று எழுதியுள்ளனர்.

இதன்படி, தமிழ்நாடு அரசு இத்தகைய அறிவிப்பு எதுவும் வெளியிட்டுள்ளதா என்று தகவல் தேடியபோது, அப்படி எந்த செய்தியும் காண கிடைக்கவில்லை. வழக்கமாக, ‘ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்,’ என்றுதான் தமிழக அரசு மட்டுமின்றி மத்திய அரசும் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது. யாருமே, ஹெல்மெட் அணிவது அவரவர் சுதந்திரம், என்று எங்கேயும் கூறவில்லை.

பொதுமக்களிடையே ஹெல்மெட் அணிய வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வுகள் பலவற்றையும் தமிழ்நாடு அரசு நடத்துவது வழக்கமாகும்.

cdn.s3waas.gov.in link

இப்படிப்பட்ட சூழலில், ஹெல்மெட் அணிய வேண்டாம், அதுபற்றி போலீசார் அபராதம் விதித்தால், 8344606680 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கவும் என்று கூறியுள்ளது நமது சந்தேகத்தை அதிகரிக்கும் வகையில் இருந்தது. எனவே, குறிப்பிட்ட அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டோம். பலமுறை முயற்சித்தும், அந்த எண் உபயோகத்தில் இல்லை என்ற தகவலே நமக்குக் கிடைத்தது.

அடுத்தப்படியாக, True Caller உதவியுடன் தேடியபோது, இந்த எண் ஏர்செல் நிறுவனத்தின் எண் என்பது தெரியவந்தது. ஏர்செல் நிறுவனம், கடந்த 2018ம் ஆண்டே திவாலான சூழலில், உபயோகத்தில் இல்லாத ஒரு பழைய தொலைபேசி எண்ணை வைத்து, பலரும் மேற்கண்ட வகையில் வதந்தி பரப்பி வருகின்றனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:ஹெல்மெட் போடாத பொதுமக்களை போலீசார் கேள்வி கேட்கக்கூடாது என்று முதல்வர் அறிவித்தாரா?

Fact Check By: Pankaj Iyer

Result: False