
‘’குஷ்பு பற்றி தரக்குறைவான வகையில் விமர்சித்த பொன்.ராதாகிருஷ்ணன்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

புதிய தலைமுறை பெயரில் மிகவும் தரக்குறைவான வாசகங்கள் அடங்கிய இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட நியூஸ் கார்டை முதலில் நாம் Troll Mafia என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் கண்டோம். ஆனால், சில மணி நேரத்தில் இந்த பதிவை அந்த ஐடி அகற்றிவிடவே, நமது சந்தேகம் அதிகரித்தது.

அதன் பிறகே, நாம் இதனை வேறு யாரேனும் பகிர்ந்துள்ளனரா என தேடி மேற்கண்ட கிளெய்ம் லிங்குகளை கண்டுபிடித்தோம். தவிர, இதுபற்றி புதிய தலைமுறை அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் தேடியதில், அவர்கள் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு கிடைத்தது.
இறுதியாக, புதிய தலைமுறையின் டிஜிட்டல் ஹெட், மனோஜ் அவர்களை ஃபேக்ட் கிரஸண்டோ தரப்பில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். இதனை பார்வையிட்ட அவர், ‘’இப்படி நிறைய தவறான தகவல்கள் புதிய தலைமுறை பெயரில் பரப்பப்படுகின்றன. இதுவும் ஒரு போலியான செய்திதான்,’’ எனக் கூறினார்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் உறுதி செய்துள்ளது. இத்தகைய தவறான தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை +91 9049053770 என்ற எமது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:குஷ்பு பற்றி அவதூறான வகையில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாக பரவும் வதந்தி!
Fact Check By: Pankaj IyerResult: False
