
‘’கி.வீரமணி கவலைக்கிடமான நிலையில் உள்ளார்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

அக்டோபர் 12, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் கீழே, ‘’கி.வீரமணி உடல் நிலை மிகவும் கவலைக்கிடம். அரோ கரா!!,’’ என்று எழுதியுள்ளனர்.
இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கி.வீரமணி பற்றி அவ்வப்போது, இறந்துவிட்டார், உடல்நலக் குறைவு என்றெல்லாம் கூறி வதந்திகள் பரவுவது வழக்கமாகும். நாம் கூட இதற்கு முன்பு, இதுபோன்ற வதந்திகள் பற்றி உண்மை கண்டறிந்து, செய்தி வெளியிட்டிருக்கிறோம்.
தொடர்புடைய கட்டுரை லிங்கை கீழே இணைத்துள்ளோம்.
இதுபோலவே, குறிப்பிட்ட ஃபேஸ்புக் தகவலும் பொய்யாக இருக்குமோ என்ற சந்தேகம் எழவே, இதன் பேரில், திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் குமாரதேவனிடம் பேசினோம். இதனை பார்வையிட்ட அவர், ‘’ஆசிரியர் கி.வீரமணி நலமுடன் உள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவும் காலத்திலும் கூட அவர் அன்றாட நடப்புகள் தொடர்பான தனது பங்களிப்பை செய்து வருகிறார். நாளை (அக்டோபர் 14, 2020) கூட தமிழியக்கம் 3ம் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். அதற்கான அழைப்பிதழைக் கூட அனுப்பி வைக்கிறேன். இதுபோன்ற வதந்திகளை நம்பாதீர்,’’ என தெரிவித்தார்.
சொன்னது போல, குறிப்பிட்ட நிகழ்ச்சியின் அழைப்பிதழை நமக்கு, வாட்ஸ்ஆப் மூலமாக, அனுப்பியும் வைத்தார். அதில், கி.வீரமணி பெயரும் இடம்பெற்றுள்ளதை காணலாம்.

எனவே, கி.வீரமணி நலமுடன் உள்ளார் என்பது சந்தேகமின்றி தெளிவாகிறது.
நேற்றும் கூட (அக்டோபர் 13, 2020) அவர் ஊடகங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

செய்தி லிங்க்…. OneIndia Tamil Link I Dailythanthi Link
எனவே, திராவிடர் கழக தலைவர் வீரமணி நலமுடன்தான் உள்ளார் என்று, அந்த இயக்கத்தின் வழக்கறிஞரே விளக்கம் அளித்துள்ளார். இதன்பேரில், குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் நிரூபித்துள்ளோம். இத்தகைய தவறான தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை +91 9049053770 என்ற எமது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
