‘’விஜய்க்கு ஆலோசகராக உள்ள பிரகாஷ் எம் சுவாமி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Claim Link l Archived Link

இதில், ‘’ "பூனை வெளியே வந்துவிட்டது" விஜய் ன் கட்சியை பதிவுசெய்ய சென்ற அக்கட்சியின் பொதுச்செயலாளருடன் உடன் செல்வது பிரகாஷ் எம் சுவாமி. முன்னாள் பத்திரிக்கையாளரான இவர் பாஜகவின் ஊதுகுழல். பெண் வன்கொடுமை வழக்கும் இவர்மீது உள்ளது. தெரிகிறதா? ரஜினியை இழுத்துப்பார்த்து ஆகவில்லை என்பதால் "substitute" ஆக வந்தவர்தான் விஜய்.... விழிப்பாக இருக்கவேண்டும், நம் கைகொண்டு நம்மை பதம் பார்க்கும் வித்தை தெரிந்தவர்கள் சங்கிகள்.,’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் கீழே புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றையும் இணைத்துள்ளனர்.

பலரும் உண்மை என நம்பி, இதனை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

முதலில், இவர்கள் குறிப்பிடும் நபர் பிரகாஷ் எம் சுவாமியா, இல்லையா என்று பார்க்கலாம்.

இதன்படி, இந்த நபர் யார் என்று விவரம் தேடினோம். தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். அப்போது நமக்கு இந்த படத்தில் இருப்பவர் விஜய்-ன் வழக்கறிஞர் என்றும், அவரின் பெயர் வெங்கட்ராமன் என்றும் தெரியவந்தது.

ஆனால், பிரகாஷ் எம் சுவாமி வேறொரு நபராக உள்ளார்; அவர் ஒரு பத்திரிகையாளர்.

இருவரது புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் இருப்பவர் பிரகாஷ் எம் சுவாமி இல்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘விஜய்க்கு ஆலோசகராக உள்ள பிரகாஷ் எம் சுவாமி’ என்ற தகவல் உண்மையா?

Written By: Fact Crescendo Team

Result: False