
‘‘விஜய் பேசியது அரசியல் அறிவின்மையின் வெளிப்பாடு,’’ என்று ரங்கசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ புதுச்சேரியில் தம்பி விஜய் பேசியது அரசியல் அறிவின்மையின் வெளிபாடுதான் அவருக்கு சரியான வழிகாட்டி இல்லை, மேலும் ங்கள் மாநிலத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்
உங்கள் அரசியல் நாடகத்தை தமிழ்நாட்டோடு வைத்துகொள்ளுங்கள்.- புதுச்சேரி முதலமைச்சர் N.ரங்கசாமி’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். முதலில் நாம் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது, ‘’இதுபோன்று எந்த கருத்தும் முதலமைச்சர் ரங்கசாமி கூறவில்லை. அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியை தவறாக திரித்து பரப்புகின்றனர்,’’ என்று விளக்கம் தரப்பட்டது.

அடுத்தப்படியாக, சமீபத்தில் விஜய் புதுச்சேரி சென்று வந்த பிறகு, அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாக, ஊடகங்களில் வெளிவந்த செய்தியை கண்டோம்.
இதன்படி, விஜயின் புதுச்சேரி பொதுக்கூட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘’நன்றி, வணக்கம், வாழ்த்துகள்,’’ என்றுதான் ரங்கசாமி கருத்து கூறியுள்ளார்.
Puthiyathalaimurai TV l News18 Tamil l Thanthi TV
இதன்மூலமாக, ரங்கசாமி பேசாத ஒன்றை அவரது பெயரில் பகிர்ந்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகிறார்கள், என்று தெளிவாகிறது.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:‘விஜய் பேசியது அரசியல் அறிவின்மையின் வெளிப்பாடு’ என்று ரங்கசாமி கண்டனம் தெரிவித்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: False


